ARTICLE AD BOX
முள்ளங்கி கீரையை மாதத்திற்கு இரண்டு முறையாவது நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார். இதன் மூலம் பல்வேறு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவை இருதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, மாரடைப்பு உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது என மருத்துவர் மைதிலி கூறுகிறார். மேலும், கெட்ட கொழுப்புகளின் அளவு உடலில் அதிகரிக்காமல் சரியான அளவில் பராமரிக்க இது உதவுகிறது. இதில் இருக்கும் மெக்னீஷியம் மற்றும் பொட்டஷியம் ஆகியவை இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது.
கல்லீரலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயலாற்றுவதற்கு முள்ளங்கி கீரை பயன்படுகிறது. மேலும், மஞ்சள் காமாலை, ஃபட்டி லிவர் பாதிப்புகளை இவை குறைக்கிறது. சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றுவதற்கு முள்ளங்கி கீரை வழிவகுக்கிறது. கண்புரை, மாலைக்கண் நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்து, கண் பார்வையை கூர்மையாக்குகிறது.
இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது. இதனால், சாதாரணமாக ஏற்படக் கூடிய காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகளையும் தடுக்கிறது. இரத்தத்தில் இருக்கு சர்க்கரை அளவை பராமரித்து, நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக் கூறுகளை இவை குறைக்கின்றன. முள்ளங்கீரையில் நார்ச்சத்து இருக்கிறது. இதன் காரணமாக பசியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.
மேலும், உடலில் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் முள்ளங்கி கீரை குறைக்கிறது. இத்தகையை நன்மைகள் அளிக்கும் முள்ளங்கி கீரை, நம் உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர் மைதிலி அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.