ARTICLE AD BOX
ஊற வைக்கப்பட்ட திராட்சை தண்ணீர் ஒவ்வொருவரின் உடலிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.
அளவுக்கும் மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பது பழமொழி. அது போல சில உணவுப் பொருட்களை அளவுக்கு மீறி பயன்படுத்தினாலும் தொல்லை தான். பொதுவாக உலர் திராட்சையை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து விட்டு அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். ஊற வைக்கப்பட்ட திராட்சை தண்ணீர் ஒவ்வொருவரின் உடலிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். உங்களுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்சினைகள் இருந்தால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். சிலர் திராட்சை தண்ணீர் குடிக்காமல் தவிர்ப்பது நல்லது. அது யாரென்று பார்ப்போம்.
ஒவ்வாமை உள்ளவர்கள் :
சிலருக்கு திராட்சை சாப்பிடுவது ஒவ்வாமை இருக்கும், அவர்கள் திராட்சை நீரைக் குடிப்பது சில பிரச்சினைகளை ஏற்படுத்தும். திராட்சையில் இயற்கையாகவே சில வேதிப் பொருட்கள் உள்ளன. சிலருக்கு திராட்சை தண்ணீர் குடித்த பிறகு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்தலாம். சிலருக்கு தோலில் தடிப்புகள், அரிப்பு, சிவப்பு புள்ளிகள் அல்லது எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் கொலஸ்ட்ராலை குறைக்க மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் திராட்சை நீரை குடிக்க கூடாது. அவர்கள் திராட்சை நீரை குடிப்பது ஆரோக்கிய சீர்கேடாகும்.
நீரிழிவு நோயாளிகள்:
திராட்சை ஊற வைத்த தண்ணீரில் இயற்கையாகவே சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. திராட்சையை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம், அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் சர்க்கரை தண்ணீரில் கரைந்து, அதன் கிளைசெமிக் குறியீட்டை அதிகரிக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் இதை குடிக்கும் போது, அவர்களின் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரித்து சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாமல் போய் விடும்.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். அது மட்டுமல்லாமல் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது அது இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து ட்ரைகிளிசராய்டாக மாறும். இந்த ட்ரைகிளிசராய்டு அதிகளவு உடலில் சேர்ந்தால் அது இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். சர்க்கரை நோயாளிகள் உடலில் அதிக சர்க்கரை சேர்ந்தால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
அதிக எடை உள்ளவர்கள்:
திராட்சையில் இயற்கை சர்க்கரையுடன் கார்போஹைட்ரேட்டுகளும் அதிகளவு உள்ளன. இதனால் இதை குடிப்பவர்களுக்கு உடனடியான ஆற்றல் கிடைக்கும். பலர் திராட்சை நீர் கல்லீரல் நச்சினை நீக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நிறைய உடற்பயிற்சிகளும் செய்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். நீங்கள் எடையை குறைக்க முயற்சிக்கும் போது, குறைந்த கலோரி மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகளை சாப்பிடுவது நல்லது.
எடை குறைக்க முயற்சிப்பவர்கள் திராட்சை நீரில் அதிக அளவு இயற்கை சர்க்கரை மற்றும் கலோரிகள் இருப்பதால் அதைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
திராட்சை நீர் ஆற்றலை அதிகரிக்க வேலை செய்கிறது. ஆனால், அது சரியாக சமநிலையில் இருக்க வேண்டும். உடல் செயல்பாடு குறைவாக உள்ளவர்கள், உடற்பயிற்சி செய்யாதவர்கள் உடலில், இந்த கூடுதல் ஆற்றல் கொழுப்பாக சேமிக்கப்படும். அது உங்களின் எடை குறைப்பு செயல்பாட்டை பாதிக்கும். திராட்சை நீரை எடுத்துக் கொள்வதற்கு முன் உங்கள் தினசரி கலோரி அளவையும் மற்றும் கட்டாய உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் பின்பற்றுவது அவசியம்.