ARTICLE AD BOX
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் இதுவரை சிஎஸ்கே அணிக்காக ஐந்து முறை கோப்பைகளை வென்று கொடுத்த ஜாம்பவான் கேப்டனாகவும் திகழ்ந்தார். அதனால் அவருக்கு இந்தியாவை தாண்டியும் ரசிகர்கள் பட்டாளம் உலகெங்கிலும் பரவி கிடக்கிறது.
நான் கேட்ட கேள்விக்கு தோனி இந்த பதிலை தான் சொன்னார் : ஹர்பஜன் சிங்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக அறிவித்துவிட்டு தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவே விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொடர் முடிந்து பேசிய அவர் :
ரசிகர்களின், அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் தான் மேலும் ஒரு சீசன் விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது 43 வயதான அவரை சிஎஸ்கே அணியின் நிர்வாகமும் மெகா ஏலத்திற்கு முன்னதாக நான்கு கோடி ரூபாய்க்கு அவரை தக்க வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு ஐ பி எல் தொடரில் அவர் விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் மகேந்திர சிங் தோனியை நண்பர் ஒருவரின் திருமணத்தில் சந்தித்த ஹர்பஜன் சிங் அவரிடம் சில கேள்விகளை முன்வைத்ததாகவும், அதற்கு தோனி அளித்த பதில் குறித்தும் தனது அந்த சந்திப்பை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் அண்மையில் ஒரு நண்பரின் மகள் திருமணத்தில் தோனியை சந்தித்தேன்.
அப்போது இந்த வயதிலும் நீங்கள் எவ்வாறு இப்படி பிட்டாக இருக்கிறீர்கள்? உங்களால் எப்படி இந்த வயதிலும் விளையாட முடிகிறது? என்று கேட்டேன். அதற்கு தோனி என்னிடம் : எனக்கு பிடித்ததே கிரிக்கெட் தான். அதை தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். வெளியிலும் சென்று விளையாட ஆசைப்படுகிறேன். அதற்காகத்தான் நான் உடற்தகுதியை பேணிக்காத்து வருகிறேன் என கூறினார். அவர் கூறிய இந்த ஒரு விஷயத்தை பார்க்கும்போது அவர் கிரிக்கெட்டின் மீது எவ்வளவு தீவிரமாக இருக்கிறார் என்று புரிகிறது.
இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட்டில் அசத்த வேண்டுமென்றால் இதை செய்தே ஆக வேண்டும் – ரோஹித்துக்கு அட்வைஸ் கூறிய சவுரவ் கங்குலி
இந்த வயதிலும் அவர் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தற்காப்பாக விளையாடாமல் டாமினேஷன் செய்து அடித்து நொறுக்குகிறார். அதே போன்று ஐபிஎல் தொடருக்காக அவர் மிகச் சிறப்பாக பயிற்சிகளை மேற்கொள்கிறார். இந்த வயதிலும் பயிற்சியில் அவரே முதலில் மைதானத்திற்கு வந்து கடைசியாக தான் வெளியே செல்கிறார் என்றும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.
The post உங்களால் மட்டும் இது எப்படி முடிகிறது? தோனியிடம் கேள்விகேட்ட ஹர்பஜன் சிங் – பதிலளித்த தோனி appeared first on Cric Tamil.