ARTICLE AD BOX
உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. 6 செகண்ட் டைம்! முடிந்தால் விடையை கண்டுபிடிங்க.. ரெடியா?
சென்னை: இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் கணித புதிருக்கான விடையை 6 செகண்டில் கண்டுபிடிக்க முடியுமா என முயற்சித்து பாருங்கள்.. படத்திற்கான விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் விடையை கமெண்டில் பதிவிடுங்கள்.. உங்களின் புத்திக்கூர்மையை சோதித்து பார்த்துடலாம் வாங்க!
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், எப்படி இருப்பதை இல்லாதது போலவும், இல்லாததை இருப்பது போலவும் காட்டி கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்கிறதோ அதேபோல கணித புதிர்களும் சில நேரம் சோதித்து பார்த்துவிடும். இத்தகைய புதிர்கள் தற்போது இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகிவருகின்றன.

ஓய்வு நேரத்தில் இணையத்தில் உலவும் நெட்டிசன்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதை கழிக்கும் வகையில் இருப்பதாலும், சிறு வயதில் படித்த கணக்கு பாடத்தை நினைவுகூரும் வகையில் அமைந்து இருக்கும் கணித புதிரை நெட்டிசன்கள் விரும்பி பார்க்கிறார்கள். போட்டி தேர்வுகளில் இதுபோன்ற கணித புதிர்கள் அதிகம் கேட்கப்படுவது வழக்கம். இதனால், போட்டி தேர்வுகளுக்கு தயாராபவர்களும், தங்களால் வேகமா விடையை கண்டுபிடிக்க முடிகிறதா? என முயற்சித்து வருகிறார்கள்.
இப்படியாக இந்த புதிர் படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆகின்றன. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. அப்படியான ஒரு புதிர் படத்தைத்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தை நன்றாக பாருங்கள். ஒரு நாய் + முயல் சேர்ந்து இருக்கும் போது 10 கிலோ எடை இருக்கின்றன. குதிரை தனியாக 20 கிலோ எடை கொண்டதாக உள்ளது. நாயும் + குதிரையும் ஒரே இடத்தில் நின்றால் 24 கிலோ உள்ளது.
அப்போது நாய் + குதிரை + முயல் என மூன்றையும் சேர்த்தால் எத்தனை கிலோ இருக்கும் என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க்.. அதிலும் வெறும் 6 செகண்டில் விடையை கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரம் தொடங்கியது... 1,2,3,4,,...6 ஓகே டைம் முடிந்தது. உங்களில் பலரும் விடையை சரியாக கண்டுபிடித்து அசத்தியிருக்க கூடும்.

விடையை கண்டுபிடிக்க முடியவில்லையே என கால்குலேட்டரை தேடிக்கொண்டு இருப்பவர்கள் இன்னும் 6 செகண்ட் டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. இப்போ முயற்சித்து பாருங்கள்.. விடையை சரியாக கண்டுபிடித்தவர்கள் ரொம்ப ஷார்ப்பான புத்திசாலிகள்தான்.. போட்டி தேர்வில் அடித்து நொறுக்கும் திறன் உங்களுக்கு இருக்கிறது.. சரி விடையை கண்டுபிடிக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம்.. எப்படி விடையை கண்டுபிடிப்பது என இங்கே சொல்லிவிடுகிறோம்..
பூனை + முயல் = 10
நாய் + முயல் = 20
பூனை+ நாய் = 24
அனைத்தையும் ஒன்றாக கூட்டுங்கள்..
பூனை + முயல் + நாய் + முயல் + பூனை+ நாய் = 10+20+24
இப்போது, 2 பூனை + 2 நாய் + 2 முயல் = 54 என்று வரும்
இதில், 2 ஐ பொதுவாக எடுத்துக்கொள்ளவும்,
இப்போது 2 ( பூனை + நாய் + முயல்) = 54 என்று வரும்
இதன் பின்னர் பூனை + நாய் + முயல் = 54/2 = 27
எனவே படத்திற்கான விடை 27 என்பதே சரியாகும்.