ARTICLE AD BOX

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தேவைப்படுகிறது. புதிதாக சிம் கார்டு வாங்க வேண்டும் என்றாலும் சரி வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றாலும் சரி அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்திய குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணங்களில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாகும். இந்த நிலையில் ஆதார் கார்டில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் விதிமுறைகள் குறித்து இதில் பார்க்கலாம்.
அதாவது எதிர்பாராத விதமாக உங்களுடைய ஆதார் கார்டு கிழிந்து விட்டால் அல்லது தொலைந்து விட்டால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்கு மாற்றாக நீங்கள் ஆன்லைன் மூலம் பிவிசி ஆதார் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு டவுன்லோட் செய்வதற்கு முதலில் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் டவுன்லோட் ஆதார் என்ற லிங்கை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் நம்பரை உள்ளீடு செய்து send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் ஓடிபி நம்பரை பதிவிட்டு download your e-aadhar card என்பதை கிளிக் செய்து உங்களுடைய ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிவிசி ஆதார் கார்டு பெறுவதற்கு மேல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை போலவே Maadhaar என்ற செயல்முறையை பின்பற்றி 50 ரூபாய் கட்டணம் செலுத்துவதன் மூலமாக உங்கள் வீட்டு முகவரிக்கே ஆதார் கார்டு டெலிவரி செய்யப்படும்.