உக்ரைன் - ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!

14 hours ago
ARTICLE AD BOX

ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக அந்நாட்டின் உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக போராடி அதனை வீழ்த்த வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்காவின் முந்தைய அரசு எடுக்கத் தவறிய நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் அதிரடியாக எடுத்து வருகிறார். யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடல் வணிகத்தையும், கடல் பயணத்தையும் நீண்ட காலமாக சீரழித்து வருகின்றனர். இதனைத் தடுக்க தீவிரமான முயற்சிகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் இருப்பதால், எங்கள் நாட்டாலோ அல்லது மற்ற நாடுகளாலோ பெரு வணிகத்துக்கான மாற்று வழிப்பாதையை உருவாக்கும் நிலை தற்போது இல்லை.

அதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளத்திற்காக யேமனில் ஹூதி படைகளின் பலத்தை அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ரஷியா - உக்ரைன் இடையிலான போரையும் டிரம்ப் கூர்ந்து கவனித்து வருகிறார். இந்த விவகாரத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் தனது நிலைப்பாட்டையும் முன்னுரிமையையும் மிகத் தெளிவாக அவர் கூறியுள்ளார். போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார் எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் இன்று பேச்சு

Read Entire Article