ARTICLE AD BOX
ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். விளாடிமிர் புடின் மற்றும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் போரை நிறுத்தி, லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதை நிறுத்த ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
டிரம்ப் கூறுகையில், "அதிபர் புடினும், அதிபர் ஜெலென்ஸ்கியும் ஒன்றிணைய வேண்டும், ஏனெனில் நாம் போரை நிறுத்தி, மில்லியன் கணக்கான மக்களைக் கொல்வதை நிறுத்த விரும்புகிறோம். நான் ஒரு போர் நிறுத்தத்தை பார்க்க விரும்புகிறேன், மேலும் ஒப்பந்தம் முடிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். இது அமெரிக்காவை அதிகம் பாதிக்காது, ஏனெனில் இது கடலின் மறுபக்கத்தில் உள்ளது; இது ஐரோப்பாவை பாதிக்கிறது" என்றார்.
அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை குறித்து டிரம்ப் மேலும் கவலை தெரிவித்தார். ஐரோப்பாவின் பங்களிப்பான 100 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா 300 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவை போரில் ஈடுபடுத்தியதற்காக விமர்சித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளோம். நாங்கள் 300 டாலர் பில்லியன் முதலீடு செய்துள்ளோம், அவர்கள் (ஐரோப்பா) 100 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர். பைடன் அவர்களுக்கு பணத்தை வழங்கினார், அது கடனாகவோ அல்லது பாதுகாப்பாகவோ இல்லை. பாதுகாப்பைப் பெற நாங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். நாங்கள் எங்கள் பொக்கிஷத்தை வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டிற்காக செலவிடுகிறோம். ஐரோப்பா நடத்தப்படும் விதத்தில் நாமும் நடத்தப்பட வேண்டும். பைடன் நம்மை இந்த குழப்பத்தில் சிக்க வைத்திருக்கக் கூடாது..." என்றார்.
ஜெலென்ஸ்கி அமெரிக்காவை பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யத் தூண்டினார் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும் ஐரோப்பாவின் சமமான நிதி பங்களிப்பு இல்லாதது குறித்தும் கேள்வி எழுப்பினார். ஜெலென்ஸ்கி தேர்தல்கள் இல்லாத சர்வாதிகாரி என்றும் டிரம்ப் அழைத்தார்.
Truth Social சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்த டிரம்ப், "யோசித்துப் பாருங்கள், ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவை $350 பில்லியன் டாலர்களை செலவழிக்க வைத்து, வெற்றி பெற முடியாத ஒரு போருக்குள் செல்ல வைத்தார். அந்தப் போர் தொடங்க வேண்டிய அவசியமே இல்லை, ஆனால் அமெரிக்கா மற்றும் "டிரம்ப்" இல்லாமல் அவரால் அதைத் தீர்க்க முடியாது" என்றார்.
மேலும், "ஐரோப்பாவை விட அமெரிக்கா $200 பில்லியன் டாலர்கள் அதிகமாக செலவு செய்துள்ளது, மேலும் ஐரோப்பாவின் பணம் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது, அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு எதுவும் திரும்பக் கிடைக்காது. இந்த போர் எங்களுக்கு இருப்பதை விட ஐரோப்பாவிற்கு மிகவும் முக்கியமானது என்பதால், ஏன் தூங்கும் ஜோ பைடன் சமன்பாட்டைக் கோரவில்லை - எங்களுக்கு ஒரு பெரிய, அழகான கடல் உள்ளது. இது தவிர, ஜெலென்ஸ்கி நாங்கள் அவருக்கு அனுப்பிய பணத்தில் பாதி காணவில்லை என்று ஒப்புக்கொள்கிறார். அவர் தேர்தல்களை நடத்த மறுக்கிறார், ஜெலென்ஸ்கி வேகமாக நகர்ந்தால் தான் அவர் வசம் நாடு இருக்கும்" என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவர தனது நிர்வாகத்தால் மட்டுமே முடியும் என்று டிரம்ப் மேலும் வலியுறுத்தினார். உக்ரைனுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்திய அதே நேரத்தில், ஜெலென்ஸ்கியின் மோசமான நிர்வாகம் ஒரு சிதைந்த நாட்டிற்கும் மில்லியன் கணக்கான தேவையற்ற மரணங்களுக்கும் வழிவகுத்தது என்று டிரம்ப் வலியுறுத்தினார்.
டிரம்ப் மேலும் கூறுகையில், "இதற்கிடையில், ரஷ்யாவுடனான போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், இதை டிரம்ப் நிர்வாகத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பைடன் ஒருபோதும் முயற்சிக்கவில்லை, ஐரோப்பா சமாதானத்தை கொண்டு வரத் தவறிவிட்டது, மேலும் ஜெலென்ஸ்கி தொடர்ந்து வசூல் வேட்டை நடத்த விரும்புகிறார். நான் உக்ரைனை நேசிக்கிறேன், ஆனால் ஜெலென்ஸ்கி ஒரு மோசமான வேலையைச் செய்துள்ளார், அவரது நாடு சிதைந்துள்ளது, மேலும் மில்லியன் கணக்கானோர் தேவையற்ற முறையில் இறந்துள்ளனர். இது தொடர்ந்து நடக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.