உக்ரைனுக்கான உளவு தகவல் உதவியை நிறுத்திய டிரம்ப்.. சிக்கலில் ஜெலன்ஸ்கி! புதின்தான் காரணமா?

5 hours ago
ARTICLE AD BOX

உக்ரைனுக்கான உளவு தகவல் உதவியை நிறுத்திய டிரம்ப்.. சிக்கலில் ஜெலன்ஸ்கி! புதின்தான் காரணமா?

New York
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உக்ரைன்-ரஷ்யா போரில் உளவு தகவல்கள் மூலம் அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வந்தது. இனி இந்த உதவிகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமீப காலமாக ரஷ்ய அதிபர் புதினுடன், டிரம்ப் நெருக்கம் காட்டி வருகிறார். மட்டுமல்லாது போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக, ரஷ்யா பக்கம் நின்றிருக்கிறார். இப்படி இருக்கையில் உளவு தகவல் உதவி நிறுத்தியிருப்பது ஜெலன்ஸ்கியை டென்ஷனாக்கியுள்ளது.

US Ukraine

இது குறித்து அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநர் ஜான் ராட்கிளிஃப் கூறுகையில், "இதுவரை கொடுத்த உளவு தகவல்கள் போதும். இனி கொடுக்க வேண்டாம் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். அவர் போருக்கு எதிரான அதிபர். உலகம் முழுவதும் அமைதி ஏற்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதற்கான முன்னெடுப்பாக இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு அமைதி குறித்து ஈடுபாடு இல்லையோ? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இது ஜெலன்ஸ்கிக்கு கிடைத்துள்ள வாய்ப்பு. இதை அவர் பயன்படுத்திக்கொண்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும். ராணுவ ரீதியாகவும் சரி, உளவு தகவல் தொடர்பாகவும் சரி, இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல்கள் பின்னாட்களில் மீண்டும் வழங்கப்படும். ஆனால் இப்போதைக்கு போர் நிறுத்தம் தேவை" என்று கூறியுள்ளார்.

அதேபோல அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறுகையில், "உளவு தகவல்களை பகிர்ந்துக்கொள்ளும் விஷயத்தில் இரு நாட்டின் உறவில் அனைத்து அம்சங்களையும் மறு பரிசீலனை செய்ய இருக்கிறோம். அதுவரை உளவு தகவல்கள் உதவிகள் நிறுத்தப்படும். இந்த விஷயத்திலிருந்து நாங்கள் பின்வாங்கிக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

உக்ரைன்-ரஷ்ய போருக்கு காரணமே அமெரிக்காதான். அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய வேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. அமெரிக்காவும் இதற்காக ஆசை காட்டியது. நேட்டோ அமைப்பில் ஒரு நாடு இணைகிறது எனில், அந்நாட்டுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அமைப்பில் உள்ள மற்ற நாடுகளும் உதவிக்கு வரும். இப்போது வரை இதில் 37 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன.

உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால், கூட்டு பயிற்சி என்கிற பெயரில் அமெரிக்க ராணுவத்தை உக்ரைன்-ரஷ்ய எல்லையில் ஜெலன்ஸ்கி கொண்டு வந்து நிறுத்துவார். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே, இப்படி செய்ய வேண்டாம் என புதின் தொடர்ந்து வலியுறுத்த, அதை ஜெலன்ஸ்கி கேட்காமல் போக.. போர் தொடங்கியது.

பைடன் அதிபராக இருந்தபோது போருக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். ஆனால் டிரம்ப் வந்த பின்னர், கொடுத்ததை எல்லாம் வசூல் செய்ய தொடங்கியுள்ளார். இதுவரை கொடுத்ததற்கு பதிலாக, உக்ரைனின் கனிம வளங்களில் பாதியை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மறுபுறும் போரை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஜெலன்ஸ்கி இதற்கு தயாராக இல்லை. எனவேதான் தற்போது உளவு தகவல்கள் உதவி நிறுத்தப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
English summary
The United States has been assisting Ukraine in the Russia-Ukraine war through intelligence support. However, it has now been announced that this assistance will be discontinued. Recently, former U.S. President Donald Trump has been showing closeness to Russian President Vladimir Putin. Moreover, he has taken a stance in favor of Russia, supporting a ceasefire.
Read Entire Article