ARTICLE AD BOX
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகிறது.
ஆப்ரிக்கா நாடுகளை அச்சுறுத்தி வந்த எபோலா தொற்றால் 2014 முதல் 2016-ம் ஆண்டில் சுமார் 11 பேர் உயிரிழந்தனர். தீவிர கட்டுப்பாடுகளால் எபோலா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தச் சூழலில், கிழக்கு ஆப்ரிக்கா நாடான உகாண்டாவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 40க்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் எபோலா தொற்றால் செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.