ARTICLE AD BOX
உ.பி.,யில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்து கல்லூரி மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் 17 வயது பிடெக் மாணவி கல்லூரியில் இருந்து வீடு திரும்பும்போது அவருக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் லிப்ட் கொடுத்துள்ளார். பின்னர் மாணவியை வயல்வெளி பகுதியில் வைத்து அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சர்தவால் காவல் நிலையப் பொறுப்பாளர் ராஜேஷ் தன்வத் கூறுகையில், பிப்ரவரி 21ஆம் தேதி மாலை மாணவி கல்லூரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட ஹிமான்ஷு தனது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்தார்.
உச்சி மாநாட்டுக்கு தாமதமாக வந்தது ஏன்? பிரதமர் மோடி பேச்சு
தொடர்ந்து அந்த மாணவியை ஒரு வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு மாணவியை அவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அவரது இந்த செயலுக்கு ஹிமான்ஷுவின் 3 நண்பர்களும் உதவியுள்ளனர் என்று தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிறுமி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
பின்னர் வீடு திரும்பிய மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ஹிமான்ஷு மற்றும் அவரது நண்பர்கள் சகிர், சித்தார்த் மற்றும் ஆதேஷ் ஆகியோருக்கு எதிராக பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.