ஈஸ்வரி செய்த சூழ்ச்சி: நேரடியாக பதிலடி கொடுத்த பாக்யா; அடுத்த வாரத்தில் இதுதான் கதையா?

2 days ago
ARTICLE AD BOX

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா - கோபி இருவரும் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வாழப்போகிறார்கள் என்று ஈஸ்வரி சொல்ல, அனைவரும் ஷாக் ஆகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிாபார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கோபி, பாக்யா, ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கையை தத்ரூபமாக காட்டி வருகிறது.

தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், தற்போது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், பழைய கதையையே மீண்டும் படமாக்கியது தான். பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவின் வளர்ச்சியில் பொறாமைப்பட்டு, அதை கெடுக்கவே சதி செய்து கொண்டிருந்தார். இதனால் சீரியலின் சமீபத்திய எபிசோடுகள், பரபரப்பை ஏற்படுத்த தவறிவிட்டது. 

மேலும் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி கேரக்டர் இறந்த உடனே பாக்கியலட்சுமி முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதே சமயம் தற்போதுவரை, பாக்கியலட்சுமி சீரியல், ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் சீரியல் எப்போது முடியும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதனிடையே இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில், பாக்கியலட்சுமி கேரக்டரில் நடித்து வரும் நடிகை கே.எஸ்.சுசித்ரா, உதயா (சன் கன்னடா) டிவியில் ஒளிபரப்பாக உள்ள கன்னட சீரியலான சிந்து பைரவி சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.

Advertisment
Advertisement

இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின், அடுத்த வார எபிசோடுக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் பாக்யாவின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் வந்திருக்க, பாக்யா, கேக வெட்டி அனைவருக்கும் கேக் கொடுக்கிறாள். அப்போது பேசும் ஈஸ்வரி, இந்த சந்தோஷமான நாளில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லப்போகிறேன். பாக்யாவும் கோபியும் திரும்பவும் சேர்ந்து வாழ போறாங்க என்று சொல்ல, கோபி பாக்யா இருவரும் ஷாக் ஆகின்றனர்.

அதன்பிறகு பேசும், பாக்யா, நீங்க என்னதான் சொன்னாலும் உங்க பையனோட என்னால சேர்ந்து வாழ முடியாது. சில விஷயங்கள் முடித்து போனால் அது முடிந்து போனது தான் என்று பாக்யா சொல்ல, ஈஸ்வரி அங்கிருந்து எழுந்து சென்றுவிடுகிறாள். அதன்பிறகு வீட்டில், எல்லார் முன்னாடியும் வச்சி அம்மா இப்படி பேசியிருக்க கூடாது தான். அவங்களுக்கு பதிலா நான் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் பாக்யா என்று கோபி சொல்கிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. 

Read Entire Article