ARTICLE AD BOX
ஈஸ்வரி கேட்ட கேள்விக்கு கோபி பதில் சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரெசார்ட் கிளம்ப ஜெனி செழியனை கூப்பிட, ஒரு ரெண்டு நிமிஷம் ஜெனி ஒரு மெயில் அனுப்பிட்டு வந்தேன்னு பேசிக் கொண்டிருக்கின்றனர் கிச்சனில் பாக்யா தேவையான ஸ்நாக்ஸ்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க ஜெனி ஏதாவது தேவைனா நம்ப அங்கே வாங்கிக்கலாம் ஆன்ட்டி எதுக்கு என்று சொல்ல இவ்வளவு பேர் போறோம் அதுவே இல்லாம இனியா போன பத்து நிமிஷத்தில் பசிக்குதுன்னு சொல்லுவா அதனாலதான் என்று சொல்லி எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து எழில் மற்றும் அமிர்தா நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வர செழியன் அவர்களை வரவேற்று விசாரிக்கிறார். சரி நீ வேல பாரு என்று சொல்லி விட்டு,அம்மா கிட்ட பேசிட்டு வரேன் என்று உள்ளே போக அங்கு அனைவரும் நலம் விசாரிக்கின்றனர். எழில் திடீர்னு ரிசார்ட் பிளான் எதற்கு அவர் அப்படி எல்லாம் பண்ணக்கூடிய ஆள் இல்லையே என்று கேட்க தெரியல என்று பாக்யா சொல்லி விடுகிறார். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வர எல்லாரும் கிளம்பிட்டீங்களா என்று கேட்கிறார் எல்லாரும் கிளம்பியாச்சுமா, என்று சொல்லிய பிறகு நான் கிளம்பி ரொம்ப நேரம் ஆச்சு என்று செல்வி சொல்லுகிறார். நீயும் வரியா என்று கேட்க ஆமாம் என்று சொல்ல நீ எதுக்கு நீ வந்து வீட்டை யாரும் பார்த்துக்கிறது என்று கேட்கிறார் வேணா போலீஸ் இரண்டு பேர் காவலுக்கு போட்டுட்டு போலாமா என்று சொல்லு அனைவரும் சிரிக்கின்றனர்.
உங்கள பாத்துக்கறதுக்காக உங்க கூட இருக்கறதுக்காக வரலாம்னு நினைச்சேன் வேண்டாம்னா சொல்லுங்க நான் நின்னுடுறேன் என்று சொல்ல பாக்யா செல்வியும் வரட்டு அத்தை என்று சொல்ல என்ன பாத்துக்கிறது இருந்தா மட்டும் வா என்று சொல்லுகிறார். உங்க கூடவே இருக்கேன் என்று சொல்லி பேசிய பிறகு கோபி எங்கே என்று கேட்டு கோபியை கூப்பிடுகிறார். கோபி ராதிகா மயூ என மூவரும் கிளம்பி வர நீ வரது சரி இவங்க ரெண்டு பேரும் எங்க கிளம்பி வராங்க என்று கேட்கிறார் எல்லாரும் குடும்பமா ஒன்னாதாமா போக போறோம் என்று சொன்ன இவங்க வர்றதுதான் நான் வரமாட்டேன் இவங்க வரக்கூடாது என்று சொல்ல கோபி ஈஸ்வரியை தனியாக அழைத்து சென்று பேசுகிறார். அவங்க ரெண்டு பேரும் ரெடி ஆயிட்டாங்க அம்மா இந்த நேரத்துல போய் நம்ம வரக்கூடாதுன்னு சொன்னா மனசு கஷ்டமாவும் அவங்களால எந்த பிரச்சனையும் வராது நான் பாத்துக்குறேன் நீங்க மட்டும் இதுக்கு சம்மதிக்கலனா அப்புறம் என்ன ரூம்ல டார்ச்சர் பண்ணுவா எனக்கு டென்ஷன் ஆகும் அப்புறம் நெஞ்சு வலி வரும் என்று சொல்லி ஈஸ்வரியே சம்மதிக்க வைக்கிறார். பிறகே ஈஸ்வரி வந்து இதுவே கடைசியா இருக்கட்டும் இதுக்கு அப்புறம் உங்க கூட எங்கேயும் வெளியே வரக்கூடாது கோபியை கல்யாணம் பண்ணிட்டா எங்க குடும்பம் ஆயிடாது என்று சொல்லிவிட்டு அனைவரும் அங்கிருந்து கிளம்பி வண்டியில் ஏறுகின்றனர்.
ஈஸ்வரி பாக்யாவிடம் இவ எதுக்கு எங்க போனாலும் கூட வரா என்று பேசிக்கொண்டு வர பாக்யா இப்ப எதுக்கு திரும்பியோ அத பத்தி பேசுவோம் அத்தை விடுங்க என்று சொல்லிவிட்டு அனைவரும் ரிசார்ட்டில் வந்து இறங்குகின்றனர். இனியா வந்தவுடன் நான் எல்லா கேம்லயும் போய் விளையாடனும் என்று சொல்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போகலாம் இனியா என்று பாக்கியா சொல்லுகிறார் அதெல்லாம் ஒன்னும் வேணாம் இப்பவே போனால் தான் எல்லாத்தையும் முடிக்க முடியும் என்று எழிலை கூப்பிட கொஞ்ச நேரம் ஆகட்டும் இனியா என்று சொல்லுகிறார் உடனே செழியனை கூப்பிட செழியனும் முடியாது என சொல்லிவிட ஜெனி மற்றும் அமிர்தாவை கூப்பிடுகிறார் அவர்களும் முடியாது என்று சொல்லிவிட்ட பிறகு கோபி இனியவை நா கூட்டிட்டு போறேன் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி உனக்கே ஆபரேஷன் பண்ணி இருக்காங்க கோபி என்று சொல்ல பெரிய ரைடலா இல்லம்மா சின்ன சின்னதா கூட்டிட்டு போயிட்டு வர என்று சொல்லிவிட்டு மயூவையும் கூப்பிடுகிறார்.
ராதிகா வேணா மயூ என்கிட்டே இருக்கட்டும் என்று சொல்ல பரவால்ல ரெண்டு பேரையும் நான் பாத்துக்கிறேன் வா மயூ என்று சொல்ல ராதிகா அனுப்பி வைக்கிறார். இதனால் ஈஸ்வரியின் முகம் மாறுகிறது. அவர்களை அழைத்துக் கொண்டு கோபி ரைட்க்கு செல்ல மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்து ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கின்றனர். ராதிகா ஜூஸ் வெளியே வாங்கி இருக்கலாமே என்று சொல்ல எல்லாத்தையும் காசு கொடுத்து வாங்கி குடிச்சிட்டு உடம்பை கெடுத்துக்க சொல்ற யாரு என்று ஈஸ்வரி கேட்கிறார். பிறகு ராதிகா எழிலிடம் பட வேலை எல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு என்று கேட்க எல்லாம் போய்கிட்டு இருக்கு நல்லபடியா என்று சொல்லுகிறார் எப்போ ரிலீஸ் பண்ண போறீங்க என்று கேட்க அடுத்த தீபாவளிக்கு என்று சொல்லுகிறார்.
உடனே ராதிகாவிற்கு ஃபோன் வர அவர் போன் பேச எழுந்து சென்று விடுகிறார் ஈஸ்வரி நிலா பாப்பாவிடம் என்ன வாயாடி பேச மாட்டேங்கற என்று கேட்க நீங்க திட்டுவீங்க என்று சொல்லுகிறார் நான் திட்றது பயந்துகிட்டு நீ பேசாம இருக்கியா சரிதான் என்று சொல்ல அனைவரும் சிரிக்கின்றனர். எழில் செழியனை வா நம்ப நடந்துட்டு வரலாம் என்று கூப்பிட இருவரும் வேலையை பற்றி பேசிக்கொண்டு வருகின்றனர்.
பிறகு அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி அமிர்தாவிடம் என்ன கேட்கிறார்? அதற்கு அமிர்தா என்ன சொல்ல போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
The post ஈஸ்வரி கேட்ட கேள்வி, கோபி சொன்ன பதில் ,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.