ஈரானிடம் பணிந்த அமெரிக்கா? டிரம்ப் போட்ட பெரிய யூ-டர்ன்.. விரைவில் முடிவுக்கு வரும் மோதல்?

1 day ago
ARTICLE AD BOX

ஈரானிடம் பணிந்த அமெரிக்கா? டிரம்ப் போட்ட பெரிய யூ-டர்ன்.. விரைவில் முடிவுக்கு வரும் மோதல்?

New York
oi-Nantha Kumar R
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக மோதல் உள்ளது. இருநாடுகளும் எலியும், பூனையுமாக உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்துக்கு கூட அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இப்படி மோதல் வலுத்து கொண்டு போகும் நிலையில் தான் இருநாடுகள் இடையேயான மோதல் முடிவுக்கு வருகிறதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்கா தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறிய தகவல் தற்பாது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் மற்ற அதிபர்களை காட்டிலும் டொனால்ட் டிரம்ப்புக்கும் ஈரான் மீது தனிக்கோபம் என்பது உள்ளது. இதனை டொனால்ட் டிரம்ப் பலமுறை வெளிப்படுத்தி உள்ளார். அமெரிக்கா அதிபராக இருந்தபோது டிரம்ப், ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து தனிமைப்படுத்தினர்.

Donald Trump Iran US

அதன்பிறகு கடந்த ஆண்டு அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டார். அப்போது ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில், இஸ்ரேல் போர் தொடுத்தது. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. தனது ஆதரவுஅமைப்புகள் மூலம் இஸ்ரேலை தாக்கியது. இதனால் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நடந்தது. அந்த சமயத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கான கட்டமைப்புகளை ஈரான் தாக்கி அழிக்க வேண்டும் என்று
டிரம்ப் பேசியிருந்தார்.

மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்பை கொல்ல முயற்சி நடந்தது. துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது டொனால்ட் டிரம்பிற்கு ஈரான் மீதான கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அதோடு அமெரிக்க அதிபரான பிறகு டொனால்ட் டிரம்ப், என்னை கொல்ல நினைத்தால் ஈரான் என்ற நாடே இருக்காது. மொத்தமாக அழிக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை செய்தார்.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா சொல்வதை அப்படி கேட்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது நாங்கள் அமெரிக்கா சொல்வதை கேட்க முடியாது. ஈரானை யாரும் சீண்டிபார்க்க வேண்டாம். மீறினால் அதற்கு உரிய பதிலடி கிடைக்கும் என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதல் காரணமாக ஈரான் தனது படை வலிமையை காட்டும் வீடியோக்களை வெளியிட்டு மிரளவிட்டது.

அதுமட்டுமின்றி ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பு கருதி அணுஆயுதங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அணுசக்தி திட்டங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஏற்கனவே அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இருந்தது. இந்த ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் தனது முதல் அதிபர் காலத்தில் முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது ஈரான் சுயமாக அணுசக்தி திட்டங்களை முன்னெடுக்கிறது.

இதற்கும் டிரம்ப் முட்டுக்கட்டை போடுகிறார். அதுமட்டுமின்றி கடந்த 18 ம் தேதி டொனால்ட் டிரம்ப், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் ‛‛அணுசக்தி திட்டம் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் இணையவில்லை என்றால் ஈரான் அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா தடுக்கும்'' என்று வார்னிங் செய்தார். இது ஈரானை கோபப்படுத்தியது. அதோடு அமெரிக்காவின் கடிதத்தை ஈரான் நிராகரித்ததோடு, அமெரிக்கா என்ன செய்ய நினைக்கிறதோ அதனை செய்யட்டும். ஈரானை உரசிப்பார்க்க வேண்டாம் என்று ஈரான் தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

அதுமட்டுமின்றி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். அப்போது ‛‛ஈரானை யாரும் லேசாக எண்ண வேண்டும். ஈரானுடன் முரண்பட்டு மோதும்போதும் அது அமெரிக்கர்களுக்கு எந்த பயனையும் தராது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள் மட்டுமின்றி அனைவரும் கண்டிப்பாக ஒன்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஈரானுக்கு எதிராக ஏதேனும் செய்ய நினைத்தால் சரியான அடி கிடைக்கும் என்பதை ஒவ்வொரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

ஈரான் கைக்கு போகும் அணு ஆயுதம்?அமெரிக்கா எதிர்ப்புக்கு நடுவே களமிறங்கிய ரஷ்யா! டிரம்புக்கு சிக்கல்
ஈரான் கைக்கு போகும் அணு ஆயுதம்?அமெரிக்கா எதிர்ப்புக்கு நடுவே களமிறங்கிய ரஷ்யா! டிரம்புக்கு சிக்கல்

இதற்கிடையே தான் ஈரான் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர தயார் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கூறியதாவது: ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதினார். அந்த கடிதம் என்பது ஈரானை மிரட்டி பார்ப்பதை நோக்கமாக கொண்டது அல்ல. ஈரானுடன் நம்பிக்கையை வளர்த்து ஆயுதம் ஏந்திய மோதலை தடுக்க முயற்சிக்கிறார். அந்த கடிதத்தில் டொனால்ட் டிரம்ப் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருந்தார்.

"முடிந்ததை செய்யுங்க".. அணு ஆயுதத்தால் வெடிக்கும் மோதல்.. அமெரிக்காவை மதிக்காத ஈரான் - பதில்

நான் அமைதிக்கான அதிபர் அமைதியை தான் நான் விரும்புகிறேன். ராணுவ ரீதியாக அமைதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நாம் பேச வேண்டும். தூதரக உறவு மூலம் பேச வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அணுசக்தி திட்டத்தின் மூலம் ஈரான் ஆயுதம் தயாரிப்பது யாருக்கும் கவலையை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும்.இதனால் ஈரானின் அணுசக்தி திட்டம் என்பது ஆயுதம் தயாரிப்பை மையப்படுத்தி இருக்க கூடாது என்பதை சரிபார்க்க முன்மொழிவை முன்வைத்தார்.

அமெரிக்கா சொன்னா கேட்கனுமா? டிரம்பிற்கு வார்னிங் தந்த ஈரான்.. போர்க்கப்பலை குறிவைத்த ஹவுதிகள்
அமெரிக்கா சொன்னா கேட்கனுமா? டிரம்பிற்கு வார்னிங் தந்த ஈரான்.. போர்க்கப்பலை குறிவைத்த ஹவுதிகள்

ஈரான் உடனான உறவு என்பது பின்நோக்கி செல்கிறது. அதை சரிசெய்வதற்கான ஒரு வாய்ப்பு இப்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற டிரம்ப் விரும்புகிறார். அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க முயற்சிக்கிறார்'' என்றார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தான் ஈரான் அமைந்துள்ள நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இப்படி கூறியுள்ளார். இது ஈரான் உடனான மோதலை கைவிட்டு சமாதானமாக செல்ல அமெரிக்கா முடிவு செய்துள்ளதை குறிக்கிறது. இதனால் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் மூலம் அமெரிக்கா பணிந்து விட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
English summary
US President Donald Trump's Middle East envoy Steve Witkoff says that, US president was trying to head off armed conflict with Iran by building trust with Tehran. Trump's recent letter to the Islamist government had not been intended as a threat. In that letter Donald Trump mentioned that I'm a president of peace. That's what i want. There's no reason for us to do this militarily. We should talk.
Read Entire Article