ARTICLE AD BOX
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என்பது இந்தியாவின் முதன்மையான விண்வெளி சார்ந்த செயல்பாடுகள், ஆய்வுகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு உதவி வரும் விண்வெளி நிறுவனமாகும். இந்நிலையில் இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், “யுவிகா” என்ற திட்டத்தை ISRO, 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்து தலா 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்களுக்கு இஸ்ரோ மையங்களில் பல்வேறு செயல்முறை விளக்க பயிற்சிகள் அளிக்கப்படும். அந்த வகையில் “2025 ஆம் ஆண்டுக்கான யுவிகா பயிற்சி மே மாதம் நடக்க உள்ள நிலையில் அதற்கான விண்ணப்பபதிவு காலம் பிப்ரவரி 24 முதல் மார்ச் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது”. மேலும், “பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் இறுதி பட்டியல் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உட்பட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்படும் என்று ISRO நிறுவனம் தெரிவித்துள்ளது. இறுதியாக பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பங்கேற்க முடியும்” என்பது குறிப்பிடத்தக்கது.