ARTICLE AD BOX
இவரு வேற மாதிரி.. SONY கேமரா.. 60X ஜூம்.. 50W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?
நத்திங் போன் 3ஏ சீரிஸ் (Nothing Phone 3a Series) மாடல்களுக்கு நத்திங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) பிரியர்களும் மரண வெயிட்டிங் மோடில் காத்திருக்கின்றனர். ஏனென்றால், டிசைன், கேமரா மற்றும் பர்ஃபாமென்ஸ் ஆகியவற்றில் பட்டையை கிளப்பும்படி இந்த மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இப்போது, கீக்பெஞ்ச் (Geekbench) தளத்தில் நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro) போனின் சிப்செட், ரேம், ஓஎஸ் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. விவரம் இதோ.
டிரான்ஸ்பரண்ட் டிசைன் போன்களில் பிரத்யேக இடம்பிடித்துள்ள நத்திங் நிறுவனமானது, மார்ச் 4ஆம் தேதியில் நத்திங் போன் 3ஏ ப்ரோ சீரிஸ் மாடல்களை களமிறக்க இருக்கிறது. இந்தியாவிலும் அதே தேதியில் வெளியாக இருக்கிறது. ஏனென்றால், பிளிப்கார்ட் தளத்தில் அந்த மாடல்களின் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. இதில் கிளிஃப் இன்டர்பேஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல ஸ்னாப்டிராகன் சிப்செட் வருவதும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், எந்த சிப்செட் என்பது குறிப்படவில்லை. இருப்பினும், மார்கெட்டில் கேமரா, சிப்செட், டிஸ்பிளே போன்ற பல்வேறு பீச்சர்கள் கசிந்துவிட்டன. இப்போது, கீக்பெஞ்ச் தளத்தில் சிப்செட், ஓஎஸ் மற்றும் ரேம் பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் உறுதியாகி இருக்கிறது.
இந்த பீச்சர்கள் நத்திங் போன் 3ஏ ப்ரோவில் வர இருக்கின்றன. ஆகவே, இதில் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Snapdragon 7s Gen 3 SoC) சிப்செட் கிடைக்க இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வர இருக்கிறது. ஆகவே, லாக்-ப்ரீ மற்றும் பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். 12 ஜிபி ரேம் கிடைக்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வர இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே கீக்பெஞ்ச் தளத்தில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கேமரா, டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்கள் மற்றும் விலை உள்ளிட்ட விவரங்கள் மார்கெட்டில் ஏற்கனவே கசிந்துவிட்டன. இந்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இது அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்படாதவை.
நத்திங் போன் 3ஏ ப்ரோ அம்சங்கள் (Nothing Phone 3a Pro Specifications): இந்த நத்திங் போனில் 6.72 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் மட்டுமல்லாமல், 3 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்க இருக்கின்றன.
அதேபோல 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த நத்திங் போன் 3ஏ ப்ரோ கொடுக்க இருக்கிறது. பேக்கப் சிஸ்டத்தை பொறுத்தவரையில் 5000mAh பேட்டரி மற்றும் 50W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வர இருக்கிறது. இது பிரீமியம் மாடலாக வெளியாக இருப்பதால், பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமராவானது, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜியுடன் கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிங் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 6X லாஸ்லெஸ் ஜூமிங் மற்றும் 60X அல்ட்ரா ஜூமிங் கிடைக்கிறது.
இந்த நத்திங் போன் 3ஏ ப்ரோ மாடலில் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.43,000ஆக இருக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 25ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Image Credits: @BenGeskin (X)