ARTICLE AD BOX
இவன மாதிரி ஒருத்தன பாக்கல.. 200MP டெலிபோட்டோ.. OLED டிஸ்பிளே.. 6000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்த மாதிரி ஒரு ஸ்மார்ட்போனை பார்க்கலைங்க என்று மூக்கில் விரல் வைக்கும்படி ஓஎல்இடி டிஸ்பிளே, 200 எம்பி டெலிபோட்டோ கேமரா, 6000mAh பேட்டரி, 90W வயர்டு சார்ஜிங், 80W வயர்லெஸ் சார்ஜிங், 32 எம்பி செல்பீ ஷூட்டர் போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் பீச்சர்களுடன் சியோமி 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra) போனானது களமிறங்கி இருக்கிறது. லெதர் பேக் பேனல், செராமிக் கிளாஸ் புரொடெக்சன் கொடுக்கும் இந்த சியோமி 15 அல்ட்ரா போனின் முழு விவரங்கள் இதோ.
சியோமி 15 அல்ட்ரா அம்சங்கள் (Xiaomi 15 Ultra Specifications): இந்த சியோமியில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core 3nm Snapdragon 8 Elite) சிப்செட் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2.0 (Xiaomi HyperOS 2.0) கிடைக்கிறது. மிட்-பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

6.73 இன்ச் (3100 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் சியோமி செராமிக் கிளாஸ் 2.0 (Xiaomi Ceramic Glass 2.0) புரொடெக்சன் மற்றும் 2K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. டிசி டிம்மிங் (DC Dimming), டால்பி விஷன் (Dolby Vision) உள்ளது.
இதுபோக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த சியோமி 15 அல்ட்ரா போனில் குவாட் ரியர் கேமரா சிஸ்டம் (Quad Rear Camera System) கிடைக்கிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 200 எம்பி சூப்பர் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதுவொரு லெய்கா (Leica) கேமரா மாடலாகும்.
மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் 1 இன்ச் சென்சார் கிடைக்கிறது. அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சார் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சோனி ஐஎம்எக்ஸ்858 (Sony IMX858) சென்சார் உள்ளது. அதேபோல சூப்பர் டெலிபோட்டோ கேமராவில் எச்பி9 இமேஜ் சென்சார் (HP9 Image Sensor) கிடைக்கிறது.
8K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஜூமிங் கிடைக்கிறது. ஓம்னிவிஷன் ஓவி32பி40 (OmniVision OV32B40) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 32 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த சியோமி 15 அல்ட்ராவில் 6000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 80W வயர்ஸெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.
இதுபோக ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.78,050ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.84,050ஆகவும் இருக்கிறது.
அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.93,655ஆகவும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி மற்றும் டூயல் சாட்டிலைட் கனெக்டிவிட்டி வேரியண்ட்டின் விலை ரூ.96,045ஆகவும் இருக்கிறது. மார்ச் 3ஆம் தேதி சீனாவில் விற்பனை தொடங்குகிறது. இந்தியாவில் மார்ச் 2ஆம் தேதி சியோமி 15 வெளியாகிறது. அதற்கு பிறகு இந்த மாடலை எதிர்பார்க்கலாம்.