ARTICLE AD BOX

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் இளையராஜாவும் சேர்ந்து விட்டால் படமும் ஹிட். பாடலும் ஹிட். அதுமட்டுமல்ல. இளையராஜாவைப் பொருத்த வரையில் அவர் எந்தப் படத்துக்கு இசை அமைத்தாலும் படத்தின் கதை சரியில்லைன்னாலும் கூட பாடலுக்காகவாவது படம் ஓடி சாதனை படைத்து விடும். அந்த வகையில் பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
ரஜினிகாந்திடம் ஒரு கேள்வி: அதே நேரம் இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் மியூசிக்கும் கிட்டத்தட்ட இளையராஜாவின் இசையைப் போன்றே இருக்கும். அவரது மகன் கார்த்திக் ராஜாவையும் கூட ஆரம்பத்தில் இளையராஜாவின் இசையாகத்தான் இருக்குமோ என்று நினைத்தார்கள். அந்த வகையில் இளையராஜா தான் இசை அமைத்துள்ளார்னு நினைத்து நடிகை சுஹாசினி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இளையராஜாவின் முகத்தைக் கடுப்பாக்கியது என்றே சொல்லலாம். வாங்க அந்த சம்பவம் என்னன்னு பார்ப்போம்.
கார்த்திக் போட்ட மியூசிக்: நீங்க தயாரிச்ச வள்ளி படத்துல ஒண்டர்ஃபுல் சாங்ஸ் இருந்தது. எவ்வளவு அழகான சாங்ஸ்னு நடிகை சுஹாசினி ரஜினியைப் பார்த்து ஒரு நிகழ்ச்சியில் கேட்கிறார். அப்போது ரஜினிகாந்தும், இளையராஜாவும் அங்கு உள்ளனர். ரஜினி உடனே, வள்ளி வந்து கார்த்திக் சார் மியூசிக் போட்டாரு. சாமி போடலை அப்படின்னார்.

எதிர்பார்க்கவே இல்லை: அதைக் கேட்ட உடனே இளையராஜாவுக்கு முகம் ஒரு மாதிரியாகப் போனது. ரஜினி இப்படி போட்டு உடைப்பார்னு அவர் எதிர்பார்க்கவே இல்லை என்பது போல அவரது முகபாவனை அப்போது இருந்தது. அதாவது சிரிப்பது போல சிரித்து விட்டு முகத்தை கோணலாக்கினார் இசைஞானி.
இளையராஜா: வள்ளி படத்தை 1993ல் ரஜினி திரைக்கதை எழுதி தயாரித்து நடித்து இருந்தார். இந்தப் படத்தில் ஹரிராஜ், பிரியாராமன், வடிவேலு, கோவிந்தா, திலீப் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
ஆனால் மேற்கண்ட சம்பவத்தைப் பார்த்தால் கார்த்திக் ராஜா இசை அமைக்க இளையராஜா கவனித்து இருப்பார் என்றே தோன்றுகிறது. பெயர் மட்டும் இளையராஜா என்று போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டிங் டாங், என்ன என்ன கனவு, என்னுள்ளே என்னுள்ளே, குகு கூ, சந்தனம் ஜவ்வாது... வள்ளி வர ஆகிய பாடல்கள் உள்ளன.