இளையராஜாவின் இசை சாதனை.. சிம்பொனி என்றால் என்ன? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

4 hours ago
ARTICLE AD BOX

இளையராஜாவின் இசை சாதனை.. சிம்பொனி என்றால் என்ன? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா!

Chennai
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றியிருந்தது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இதனையடுத்து சிம்பொனி என்றால் என்ன? ஏன் அது இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இக்கேள்விகளுக்கு இந்த செய்தி விளக்கமளிக்கிறது.

x தளத்தில் ஜெயக்குமார் என்பவர் இது தொடர்பான தகவல்களை விரிவாக பகிர்ந்திருக்கிறார். அதன் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

Ilaiyaraaja symphony tamil nadu

சிம்பொனி என்றால் என்ன?:

"ஒரு கதை அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்ச்சியை இசை வடிவத்தில் 4 பகுதிகளாக சொல்வதற்கு பெயர்தான் சிம்பொனி. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பொனி என்பது ஒரு ஆர்கஸ்ட்ரா (Orchestra) அவ்வளவுதான். உலகில் பல வகையான ஆர்கஸ்ட்ரா இருக்கிறது. அதில் முக்கியமானவை..

1.சேம்பர் ஆர்கஸ்ட்ரா (Chamber Orchestra)
2.சிம்பொனி ஆர்கஸ்ட்ரா (Symphony Orchestra).

16ம் நூற்றாண்டு வரை இசையும் பாடலும் ஒன்றாக கலந்தே இருந்தது. இசையை மட்டும் தனியாக கேட்க முடியவில்லை. அதனால் இசையின் ஆழத்தை அறிந்து கொள்வதற்காக பாடல் இல்லாமல் இசையை மட்டும் கேட்பதற்காக உருவாக்கப்பட்டது. அது தான் 'சிம்பொனி'.

சிம்பொனி வரலாறு:

இதற்கு சரியான வடிவத்தைக் கொண்டுவந்து, இதை புகழ் பெற வைத்தவர் Father of Symphony என்று அழைக்கப்படுகிற ஜோசப் ஹைடன் (1732-1809). வோல்ஃப்காங் அமடேயுஸ் மொசார்ட் (Wolfgang Amadeus Mozart) மற்றும் பீத்தோவன் இருவருக்கும் இவர்தான் குருநாதர்.

மீண்டும் சிம்பொனிக்கு வருவோம். ஒரு இசை வடிவம் எப்பொழுது சிம்பொனி என்று அழைக்கப்படுகிறது?. ஒரு சிம்பொனி எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்?,
எத்தனை இசைக் கருவிகள் பயன்படுத்த வேண்டும்?, எவ்வளவு இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்?.

கட்டுப்பாடுகள் என்ன?:

ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும். 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் இதை இசைக்க வேண்டும்.

இந்த எண்ணிக்கையில் ஒன்று குறைந்தால் கூட அது சிம்பொனி ஆர்கஸ்ட்ரா என்று அழைக்கப்படாது. மாறாக அது சேம்பர் ஆர்கஸ்ட்ரா என்றுதான் அழைக்கப்படும். ஏன் இதற்கு இவ்வளவு கட்டுபாடுகள?. இதற்கு சிம்பொனி எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டால் இதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்..

சிம்பொனி நான்கு பகுதிகளாக இசைக்கப்பட வேண்டும் என்பதை முதலில் பார்த்தோம். இப்போது அந்த நான்கு பகுதிகள் எவை? அது எப்படி இருக்க வேண்டும்? என்பதை பார்ப்போம். இதை விளக்குவதற்கு இங்கிலாந்து இளவரசியின் திருமணத்தை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

1. The Fast Movement:

காலையில் திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. இது துவக்க நிலை உறவினர்கள், நண்பர்கள், விஐபிகள் போன்றவர்கள் அங்கு வருகை தர ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் கோலாகலமாக இருக்கும். இதை குறிப்பதற்கு இசை துள்ளலாக, கொஞ்சம் அதிரடியாக இருக்க வேண்டும்.

2. The Slow Movement:

இப்போது அரண்மனைக்குள் அனைவரும் செட்டில் ஆகியிருப்பார்கள். மணமகன், மணமகள் அங்கு தோன்றுவார்கள். இப்போது துவக்க நிலை இசையை நன்றாக விரிவுபடுத்தி இசையின் ஆழத்திற்கு செல்ல வேண்டும். இந்த பகுதி அமைதியானதாக இருக்க வேண்டும். மெலடி டியூன்ஸ் இங்கு அதிகம் வாசிக்கப்படும்.

3. The Dance Number:

திருமணம் முடிந்து கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கிறது. இப்போது அந்த இடம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். இதை குறிக்கும் வகையில் இசை என்பது நடனம் ஆடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும்.

4. An Impressive Fast Movement:

இப்போது அரண்மனைக்குள் தீ பிடித்து விடுகிறது. அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பிப்பார்கள். இப்போது அந்த இடம் பதட்டமாக இருக்கும். இதுதான் சிம்பொனியின் உச்சகட்டம். இங்கு இசையில் நிறைய பரிசோதனைகள் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் காண்பித்து சிம்பொனியை நிறைவு செய்வார்.

இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்குதான் 20 நிமிடங்களுக்கு மேல் இசை தேவைப்படுகிறது. இதற்குத்தான் 80க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

மிக முக்கியமாக, சிம்பொனி இசையை ஸ்டுடியோவுக்கு உள்ளே உருவாக்கி பின்னர் அதை வெளியிடக் கூடாது. ஒரு பெரிய அரங்கத்தில் 80க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களோடு, ஒவ்வொரு இசையையும் இருபது நிமிடங்களுக்கு மேல் பார்வையாளர்களுக்கு முன்னிலையில் இசைக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அது சிம்பொனியாகக் கருதப்படும்" என x தள பதிவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
In London, Ilaiyaraaja's symphony titled "Valiant" was premiered and has garnered significant attention. Following this, questions have arisen, such as "What is a symphony?" and "Why is it such a significant achievement for composers?" This news provides explanations to these questions.
Read Entire Article