ARTICLE AD BOX
தயாரிப்பாளர் தாணு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தற்பொழுது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இடி முழக்கம், மெண்டல் மனதில் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் கிங்ஸ்டன் எனும் ஹாரர் திரில்லர் படத்திலும் நடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ். இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்க ஜி.வி. பிரகாஷே இப்படத்தை தயாரித்து இதற்கு இசையும் அமைத்துள்ளார். இதில் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வருகின்ற மார்ச் 7ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர் டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று (பிப்ரவரி 27) மாலை 7 மணி அளவில் வெளியாக உள்ளது. எனவே இந்த படம் தொடர்பான ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சுதா கொங்கரா, வெற்றிமாறன், தாணு போன்ற பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது தயாரிப்பாளர் தாணு, ஜி.வி. பிரகாஷ் குறித்து பேசியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர். ரகுமானுக்கு பிறகு ஜி.வி. பிரகாஷ் தான். என்னுடைய தயாரிப்பில் வெளிவந்த அசுரன் படத்திற்கு அவர் உலகத்தரம் வாய்ந்த இசையை கொடுத்திருந்தார். கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் அருமையாக வந்திருக்கிறது. படத்தை திரையரங்குகளில் காண காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.