ARTICLE AD BOX
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தேங்காய் தண்ணீரில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் (இளநீர் அல்ல) குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று இந்தப் பதிவில் காண்போம்.
தேங்காய் தண்ணீரின் முக்கியமான மூலப்பொருள், அதன் மொத்தத் தண்ணீரும்தான் ஆகும். தேங்காய் தண்ணீரில், வைட்டமின் சி மற்றும் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு தாதுக்கள் அடங்கியுள்ளன. தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறுவதோடு, சிறுநீர்பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
தேங்காய் தண்ணீரைக் கொண்டு (இளநீர் அல்ல) ஏழு நாட்கள் தொடர்ந்து முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்கள் நீங்கி முகம் பொலிவு பெறும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அது உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சமப்படுத்தி, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.
விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு நடுவில் தேங்காய் தண்ணீர் குடித்தால் உடனடி எனர்ஜி மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும். தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும், தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரகக் கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்து விடவும் செய்யும்.
உயர் இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் தினசரி காலையில் தேங்காய் நீர் குடித்து வந்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். தேங்காய் நீரில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இதன் கலோரிகளும் குறைவாக உள்ளதால் நீரிழிவு நோயாளிகளும் இதனைப் பயன்படுத்தி பலன் அடையலாம்.
செரிமான பிரச்னை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்துவந்தால், செரிமான பிரச்னை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில், தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும் உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும், இதை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம். தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும் போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.