ARTICLE AD BOX
இல்லத்தரசிகளுக்கு 6 அட்டகாசமான பிசினஸ் ஐடியா! வீட்டிலிருந்தே தொடங்கலாம்!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டில் இருக்கும் பொறுப்பை கையாள்வது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்து இருக்காமல் நிதி ரீதியாக சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்கு ஏற்ப வீட்டிலிருந்து சம்பாதிக்க உதவும் பல பிசினஸ் ஐடியாக்கள் உள்ளன. நீங்களும் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் பெண்களில் ஒருவராக இருந்தால்.. இந்த பதிவு உங்களுக்கானது தான். குறைந்த செலவில் நல்ல வருமானத்தை வழங்கும் சில பிசினஸ் ஐடியாக்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
வீட்டு முறை உணவு: பொதுவாக வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு சமையல் செய்வது பிடிக்கும். வீட்டிலிருந்தே எளிதில் பணம் சம்பாதிக்க வீட்டு முறை உணவுகளை சமைக்கலாம். டிஃபன் சர்வீசஸ் அல்லது கேக் பேக்கிங் தொழிலை தொடங்கலாம். இதற்கான செலவுகள் குறைவு. ஏனெனில் வீட்டிலேயே ஏற்கனவே அனைத்து சாமான்களும் இருக்கும். நீங்கள் உணவை தயார் செய்வதற்கு தேவைப்படும் பொருட்களை மட்டுமே வாங்க வேண்டி இருக்கும். எனவே வீட்டில் இருந்தே இந்த தொழிலை தொடங்கலாம்.

பொட்டிக்: தையல் தெரியும். ஆரி ஒர்க் போட தெரியும் என்றால் வீட்டிலிருந்து எளிதில் பணம் சம்பாதிக்க பொட்டிக் ஒரு சிறந்த வழியாகும். நீங்கள் தைத்த ஆடைகளின் படங்களை சமூக ஊடக தளங்களில் அப்லோட் செய்யலாம். அதுமட்டுமின்றி ஆஃப்லைனிலும் விற்கலாம். ஆஃப்லைன், ஆன்லைன் ஆகிய இரண்டிலும் உங்களுடைய திறமை வெளிப்பட தொடங்கிவிட்டால் எங்கெங்கோ இருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கும். தையல் தெரியவில்லை என்றாலும் வெளியில் இருந்து ஹோல்சேலாக துணிகளை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
ஃப்ரீலான்சிங்: இப்போதெல்லாம் பெண்கள் எழுதுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே வீட்டிலிருந்தே டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது கன்டென்ட் ரைட்டிங் செய்யலாம். கவிதை எழுதுவது உங்களுக்கு பிடிக்கும் என்றால் கவிதைகள் மற்றும் கதைகளை எழுதி விளம்பரப்படுத்தி அதன் மூலம் சம்பாதிக்கலாம். அப்படி இல்லை என்றாலும் நீங்கள் ஒரு ஆன்லைன் இணையதளம் தொடங்கி உனங்களுக்கு பிடித்த விஷயங்களை எழுதி பதிவேற்றலாம். உங்களுடைய இணையதளத்திற்கு டிராபிக் அதிகரித்தால் இதன் மூலம் கூகுளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
டியூஷன் வகுப்புகள்: நீங்கள் நன்றாக படித்திருந்தால் உங்கள் வீட்டிலேயே டியூஷன் எடுக்கலாம். அருகில் இருக்கும் குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர்கள் டியூஷனுக்கு அனுப்புவதை பார்த்திருப்பீர்கள் அல்லது இந்த கதையை படித்துக் கொண்டிருப்பவர்களே உங்கள் குழந்தையை டியூஷனுக்கு அனுப்பி கொண்டிருப்பீர்கள். அவர்கள் என்ன கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.. நீங்களும் வீட்டில் இருந்து டியூஷன் வகுப்பு நடத்தி மாதம் வருமானம் பெறலாம். உங்களால் எளிதில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என்றால் இந்த வேலை உங்களுக்கு வசதியானதாக இருக்கும்.
அகர்பத்திகள்: உலர்ந்த பூக்களை பயன்படுத்தி வீட்டிலேயே அகர்பத்தி தயாரிக்கும் தொழிலைத் தொடங்கலாம். ஆர்கானிக் முறையில் தயாரித்து விற்பனை செய்வதற்கு சந்தையில் நல்ல மதிப்புண்டு. ஆனால் நீங்கள் தயாரிக்கும் அகர்பத்திகள் பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருப்பது முக்கியமாகும். ஏனெனில் எல்லா அகர்பத்திகளின் வாசனையும் எல்லாருக்கும் பிடிக்கும் என்று கூறிவிட முடியாது. இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு சில நிபுணரின் ஆலோசனையை பெற வேண்டும்.
அழகு நிலையம்: குறைந்த முதலீட்டில் வீட்டிலேயே ஒரு அழகு நிலையத்தை திறந்து லாபம் ஈட்டலாம். அழகு நிலையம் வேகமாக வளர்ந்து வரும் வணிகமாகும். பியூட்டிஷியன் தொழிலில் தற்போது போட்டி அதிகரித்து வருகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் அழகு நிலையும் தொடங்கினாலும், பிறரை விட திறமையாக இருக்கிறீர்களா? என்பதைப் பொறுத்து நல்ல லாபம் பெறலாம்.