ARTICLE AD BOX
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
மண்டபம் தெற்கு துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற 10 மீனவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளது.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையை கண்டித்து, நாளை ஒரு நாள் அடையாள
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மீனவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.