ARTICLE AD BOX
இறங்கி அடிப்பது யார் ?.. பிரியங்காவை பத்தி டிடி என்ன சொன்னார் தெரியுமா!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் சீக்கிரமே பிரபலமாவார்கள். இதுபோன்று ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொருவரும் சிறப்பான தொகுப்பாளராக இருப்பர். இந்த சிறப்பிடத்தை பெற்றவர் தான் பிரியங்கா. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கும், மணிமேகலைக்கு ஏற்பட்ட பிரச்னையால், மணிமேகலை ஜீ தமிழுக்கு மாறிவிட்டார். தற்போது இதுகுறித்த பிரச்னை மேலும் பூதாகரமாக வெடித்துள்ளது.
குக் வித் கோமாளி: கடந்த குக் வித் கோமாளி சீசனை மணிமேகலை தொகுத்து வழங்கினார். அதில், மணிமேகலை எது செய்தாலும், சொன்னாலும் அது பற்றி பிரியங்கா குறை கூறி வந்தார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்தது. சரி அத்தோடு முடிந்துவிடும் என்று நினைத்தால் மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன் என ஷாக் கொடுத்தார். அப்போது பிரியங்காதான் இதற்கு காரணம் என மணிமேகலைக்கு ஆதரவாக சிலர் பேச தொடங்கினர். ஆனால், பிரியங்கா ஆதரவாளர்கள் இதற்கு மணிமேகலை தான் அவர் அதிகபிரசங்கி தனமாக நடந்துகொள்வதாக குறை கூறினர்.

ஜீ தமிழில் என்ட்ரி: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். பின்னர், ஜி தமிழில் என்ட்ரி தருவதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மணிமேகலை தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்து தொகுத்து வழங்கி வருகிறார். அதில், மணிமேகலை செய்யும் லூட்டிகள் வைரலாகி வருகிறது.
மனம் திறந்த பிரியங்கா: மணிமேகலை தனது பக்கம் இருக்கும் நியாயங்களை வெளிப்படையாக பேசியிருந்தாலும் பிரியங்கா இதுவரை இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார். விஜய் டிவியும் பிரியங்காவிற்கு ஆதரவு தெரிவித்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரசிகர் ஒருவர் பிரியங்காவிடம் கேட்ட கேள்விக்கு, சிலர் தாங்கள் நினைப்பது தான் சரியென நினைத்து வருகின்றனர். மற்றப்படி பெண்கள் எல்லோருமே மற்ற பெண்களுக்கு சப்போர்ட் பன்றாங்க என மறைமுகமாக மணிமேகலையை சாடி பேசியிருந்தார். இந்நிலையில், விஜே பிரியங்கா குறித்து திவ்யதர்ஷினி கூறியிருப்பது ஆச்சர்யத்தை தந்துள்ளது.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக 20 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் திவ்யதர்ஷினி. எல்லோருக்கும் செல்லமாக டிடி என்று சொன்னால் தான் தெரியும். முதன்முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் உள்ளார். காபி வித் டிடி நிகழ்ச்சி தான் இவரை பிரபலம் ஆக்கியது.

பொறாமை: பிரியங்காவை பார்க்கும் போது எனக்கு வியப்பாக இருக்கிறது, அதேநேரத்தில் கொஞ்சம் பொறாமையும் வருகிறது. எந்த இடத்திலும் இறங்கி அடித்து வேலை செய்யும் நபராக பிரியங்கா இருக்கிறார். பிரியங்கா. எங்களை பார்த்து மேலே வந்தவர். பொதுவாக நாம் அடுத்தவர்களுக்கு வழி விடுவது தப்பு ஒன்றும் இல்லை என டிடி தெரிவித்திருப்பது பிரியங்காவின் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மேலும் பிரியங்கா கூறியது போல் மணிமேகலை ரொம்ப பேசியிருப்பாங்க போல என நெட்டிசன்கள் கமாண்ட் செய்து பிரியங்காவுக்கு ஆதரவாக இறங்கியுள்ளனர்.