ARTICLE AD BOX
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில், டெக்ரேஷன் பணத்தை முன்பே வாங்கிவிட்டதாக மீனா ஏமாற்றப்பட்ட நிலையில், இதற்கு காணரம் சிந்தாமணி தான் என்று மீனா நிரூபித்துவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மண்டபத்தில் மேனேஜர் ப்ளான் செய்து மீனாவை ஏமாற்றியுள்ளதை தெரிந்துகொண்ட ஓனர், மேனேஜரை பளார் என்று அறைவிட்டு, இனிமேல் மண்டபத்து பக்கமே வராதே. அதேபோல் நீங்க இனிமேல் என் கண்ணிலே பட கூடாது என்று சிந்தாமணிக்கு வார்ணிங் கொடுத்துவிட்டு கிளம்புகிறார். அடுத்து மீனா, சிந்தாமணியிடம், நீ வாழு மத்தவங்களையும் வாழ விடு, நான் மட்டும் தான் இந்த தொழிலில் இருப்பேன் என்று திரும்பவும் என்னை அழிக்க ப்ளான போடாதீங்க என்று சொல்கிறாள் மீனா.
அடுத்து சீதா, உங்களுக்கும் அந்த ஓனர் ஒரு அடி விட்டுருக்கனும், அப்போதான் திருந்துவீங்க, எங்க அக்கா இருந்த இடத்தில் நான் இருந்திருந்தால், அறை விட்டிருப்பேன் என்று கையை ஓங்கிக்கொண்டு செல்ல, சிந்தாமணி கோவப்படுகிறாள். நீங்க எங்களை வளர விடாமல் அடிக்கும்போது உங்களை அடிப்பதில் தப்பில்லை. ஆனால் அவங்க அளவுக்கு நாங்கஇறங்கி போகமாட்டோம் என்று சொல்லிவிட்டு மீனாவும் சீதாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.
அடுத்து தனக்கு பணம் கொடுத்த பைனான்சியரிடம் செல்லும் மீனாவை அங்கிருக்கும் ஒருவர் திட்ட, பைனான்சியர் மீனாவை உட்கார வைத்து என்ன நடந்தது என்று கேட்கிறார். அப்போது மீனா நடந்ததை சொல்ல, இனிமேல் எவ்வளவு பெரிய ஆர்டராக இருந்தாலும், நீ எடு, எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நான் கொடுக்கிறேன் என்று சொல்லி மீனாவை அனுப்பி வைத்துவிட்டு, தனது மகளுடன்சிந்தாமணி இருக்கும் போட்டோவை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
சத்யாவுடன், டீக்குடிக்கும் மீனா, முத்துவுக்கு போன் செய்து நடந்ததை சொல்ல, முத்து ஆச்சரியமாகிறான். அதன்பிறகு நான் இருந்திருந்தால் இந்த பிரச்னை வேறு மாதிரி ஆகியிருக்கும். ஆனால் நீ இந்த பிரச்னையை சமார்த்தியமாக கையாண்டு இருக்கிறாய் என்று சொல்கிறான். அதன்பிறகு வீட்டுக்கு வரும் மீனா, எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்க, முத்து சந்தோஷத்துடன் மாலையும் ஸ்வீட்டும் வாங்கிக்கொண்டு வருகிறான். தனது சவாரி முடிந்துவிட்டதாகவும், கேட்டதை விட அதிக பணம் கொடுத்தாகவும் சொல்லும் முத்து மீனாவுக்கு நடந்தையும் சொல்கிறான்.
இதை கேட்ட அண்ணாமலை, மீனா இதை என்னிடம் சொல்லவே இல்லையே என்று சொல்ல, இது எனக்கும் தெரியும் அங்கிள், நான் தான் சிந்தாமணி குரலில் பேசி அவர்களை வர வைத்தேன் என்று ஸ்ருதி சொல்ல, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அண்ணி தான் முன் உதாரணம் என்று ரவி சொல்ல, மனோஜ் என்ன பெரிய விஷயம், கையெழுத்து போடும்போதே பார்த்து போட்டிருந்த இவ்வளவு பிரச்னை இல்லையே என்று சொல்கிறான் மனோஜ்.
இதை கேட்ட முத்து, நீ ஏமாற்ந்த 30 லட்சத்தை இன்னும் வாங்கவில்லை. ஆனால், மீனா 2 லட்சத்தை 2 நாளில் வாங்கிவிட்டால் என்று சொல்ல, ரவி மனோஜிடம் ஏண்டா இப்படி என்று கேட்க, முத்து எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறான். ஸ்வீட் வேண்டாம் என்று சொல்லும் விஜயா, எல்லோரும் சென்றவுடன் தனியாக அமர்ந்து யோசிக்க அத்துடன் எபிசோடு முடிகிறது.