ARTICLE AD BOX
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள ப்ரோசோன் வணிக வளாகத்தின் இரண்டாவது மாடிக்கு நாய் ஒன்று கடந்த 8 தேதி அன்று சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அங்கு உள்ள ஊழியர்கள் நாயை தூக்கி இரண்டாவது மாடியில் இருந்து வீசியுள்ளனர். அதன் சி.சி.டி.வி கட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாய்...பதபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
இந்நிலையில் கௌதம் என்பவர் அந்த நாயை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தார். படுகாயம் அடைந்த நாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதற்கு காலில் மட்டும் எலும்பு முறிவு எப்படி இருந்ததாக கூறினர். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வாயில்லா ஜீவனை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி அந்த நாய்க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளதாகவும், நாய் இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.