இரண்டாவது நாளாக குறையும் தங்கம் விலை..!! நகைகள் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே..!!

2 hours ago
ARTICLE AD BOX

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது தற்போது திடீரென சரிய தொடங்கியுள்ளது. அதாவது, நேற்று தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் (27.02.2025)ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 1 சவரன் ரூ. 64,080 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து 1 கிலோ ரூ. 1,05,900 ஆகவும், 1 கிராம் ரூ. 105.90 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read Entire Article