ARTICLE AD BOX
இரண்டாவது திருமண சர்ச்சை.. விபரமாக சொல்கிறேன்.. மாதம்பட்டி ரங்கராஜ் விளாசல்
சென்னை: நடிகரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவருமான மாதம்பட்டி ரங்கராஜ்தான் கடந்த சில நாட்களாக சின்னத்திரை உலகில் தலைப்பு செய்தியாக இருக்கிறார். ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்த அவர்; தற்போது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் தொடர்பில் இருப்பதாகவும்; விரைவில் அவர்களுக்கு திருமணம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. இப்படிப்பட்ட சூழலில் ரங்கராஜ் காட்டமாக சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
குக்கூ படத்தை இயக்கியவர் ராஜுமுருகன். அவரது சகோதரரான சரவண ராஜேந்திரன் இயக்கிய படமான மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அந்தப் படம் வணிக ரீதியாக கொண்டாடப்படாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக ரங்கராஜின் நடிப்பு மிக பிரமாதமாக இருந்தது என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு பெரிதாக எந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.

வெகு பிரபலம்: சினிமாவில் அறிமுகமாகி பிரபலமாவதற்கு முன்னரே மாதம்பட்டி ரங்கராஜ் பிரபலம்தான். அதாவது விஐபிக்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு தனது டீமுடன் சமைத்து கொடுப்பார். அவரது சமையல் என்றாலே கண்டிப்பாக ஏதோ ஒரு விஐபி வீட்டு நிகழ்ச்சிதான் என்று உறுதி செய்துகொள்ளலாம். அந்த அளவுக்கு அவர் ஃபேமஸாக திகழ்ந்துகொண்டிருந்தார்.
ஓர் இலக்கியவாதியின் மரணம்.. கவிஞர் நந்தலாலா இழப்பிற்கு வைரமுத்து இரங்கல் கவிதை!
குக் வித் கோமாளி: இப்படிப்பட்ட சூழலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெங்கடேஷ் பட் வெளியேறியதைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு இந்த பிரபல்யத்துடன் இந்த நிகழ்ச்சியின் மூலமும் பிரபல்யம் கிடைத்தது. நடுவராக மட்டுமின்றி ஹியூமர் சென்ஸோடும் அவர் நிகழ்ச்சியை நகர்த்தியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில்தான் அவருக்கு ஜாய் கிரிஸில்டா என்பவர் ஆடை வடிவமைப்பாளராக இருப்பதாக தெரிகிறது.
எங்க அப்பா மாதிரி உங்களால முடியாது.. கமலுக்காக சிவாஜியிடம் சண்டையிட்ட ஸ்ருதி ஹாசன்
ஜாயுடன் காதல்: இதற்கிடையே ஸ்ருதி என்பவரை ரங்கராஜ் திருமணம் செய்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க ஸ்ருதியுடன் ரங்கராஜுக்கு பிரச்னை என்றும்; ஜாய் கிரிஸில்டாவுடன் காதல் என்றும் கிசுகிசுக்கள் எழுந்தன. முக்கியமாக தனது பெயருடன் ரங்கராஜ் பெயரையும் இணைத்திருக்கிறார் ஜாய். இது ஒருபக்கம் இருக்க, நான் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவிதான் என்று சமீபத்தில் ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இப்படி விவகாரம் சூடுபிடிக்க; மாதம்பட்டி ரங்கராஜ் முதன்முதலாக மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ரங்கராஜின் பேச்சு: இந்த விஷயம் தொடர்பாக அவர் பேசுகையில், "என் வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சில விஷயங்கள் எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு தொடர்புடையது. அதனை நான் ஏன் வெளியில் பேச வேண்டும். அவசியம் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற நிலைமை வரும்போது அனைத்தையும் விபரமாக சொல்கிறேன்" என்றார்.