இரண்டாவதாக தாய்மை அடையும்போது மூத்த குழந்தையை பெற்றோர்கள் சமாளிப்பது எப்படி?

2 days ago
ARTICLE AD BOX

முதல் குழந்தை பிறந்து இரண்டு மூன்று வருடங்களுக்குள் இன்னொரு குழந்தை பிறந்துவிட்டால், அது முதல் குழந்தையை பெரிதும் பாதிப்பதில்லை. ஆனால் காலம் கடந்து இரண்டாவது குழந்தை பிறக்கும்பொழுது அது முதல் குழந்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இப்பதிவில் காண்போம். 

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் முதலில் ஆண் குழந்தை பிறந்து அவன் பிளஸ் ஒன் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவதாக தாய்மை அடைந்திருந்தார் அவனுடைய தாய். இது அவனுக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. ஏன் நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்களை எல்லாம் எனக்கு மாத்திரமே கொடுப்பதற்கு பிடிக்காமல், அதை பங்கு போட்டுக் கொடுப்பதற்குதான் இன்னொரு குழந்தைக்கு ஆசைப்படுகிறீர்களா? இப்பொழுது இத்தனை வயதிற்கு அப்புறம் உங்களுக்கு இரண்டாவது குழந்தை அவசியமா என்று கேட்டு பெற்றோரை மிகவும் துன்பத்தில் ஆழ்த்தினான்.

அவனின் பெற்றோர் இதை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவனை அவனின் நண்பர்கள் இதுபோல் எல்லாம் தூண்டிவிட்டு பேச செய்தது தெரியவந்தது. பிறகு அவனின் கேள்விக்கு பதில் கூறும் வகையில் அவனை மிகவும் பொறுமையாக கையாள ஆரம்பித்தனர். 

இதையும் படியுங்கள்:
பூஜையறையை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் தெரியுமா?
lifestyle articles

அவனின் பெற்றோர்கள் அதிகமான குழந்தைகளுடன் பிறந்தவர்கள். ஆதலால் அதைச் சுட்டிக்காட்டி அவர்கள் அவர்களின் உடன் பிறப்புகளுடன் எப்படி எல்லாம் பழகினார்கள். பாசப்பிணைப்பாக இருந்தார்கள். அதனால் தனிமை உணர்வு எவ்வாறு தகர்த்தெறியப்பட்டது.

பொழுது போக்குவதற்கு, வீட்டுப்பாடம் செய்வதற்கு என எல்லா வகையிலும் உடன்பிறப்புகள் எப்படி உற்ற தோழனாக செயல்பட்டார்கள். வளரும் பருவத்தில் மனம் விட்டு பேசுவது, உணர்வுகளை புரிந்து கொள்வது என எப்படி மூத்தவர்கள் நட்புறவாக செயல்பட்டார்கள் என்பதை ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தார்கள். 

எந்த தீனியாக இருந்தாலும் அதை பகிர்ந்து கொள்ளும் பக்குவத்தை உடன் பிறப்புகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம். இதனால் அன்பு, பாசம், இரக்கம், விட்டுக்கொடுத்தல் போன்ற பல்வேறு சிறப்பு குணங்களை எங்களால் பெறமுடிந்தது. எதையும் அனுசரித்து போகும் பண்பு இன்று வரை எங்களிடம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாங்கள் உடன்பிறப்புகளோடு சமரசமாக வாழ்ந்ததுதான். 

இன்றும் எங்கள் உடன்பிறப்புகளுக்குள் கஷ்டமான பிரச்னைகள் வந்தால் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகளை உடன்பிறப்பு களிடம்தான் கேட்போம். அவர்களும்  அதிலிருந்து மீள்வதற்கான ஐடியாக்களை கொடுத்து உதவி செய்வார்கள். உணர்வுகளை வெளிப்படுத்தவும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பவர்கள் அவர்கள்தான்.

இன்றும் உடன் பிறந்தவர்கள் உடன் குழுவாக இணைந்துதான் எந்த ஒரு வேலையையும் கூட்டு முயற்சியுடன், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து முடிவெடுத்து  செய்கிறோம்.

சில நேரங்களில் படிப்பு முதல் கலைகள் அனைத்திலும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவதற்கு தூண்டிவிடும் விதமாக உடன்பிறப்புகள் அமைந்து விடுவதும் உண்டு .இது சமூக திறன்களை வளர்ப்பதற்கு உதவுகிறது. 

இப்படி பல்வேறு விஷயங்களில் உடன்பிறப்புகள் இருப்பது நமக்கு ஆறுதலும் ,உறவுகள் இருக்கிறது என்ற தெம்பும் மனதிற்கு உற்சாகத்தை அளித்து மென்மேலும் வளர வழிவுக்கும். அதுபோல் உறவு உனக்கும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மற்றபடி சொத்துக்காக இன்னொரு குழந்தைக்கு நாங்கள் ஆசைப்படவில்லை என்று ஒவ்வொரு நாளும் அந்த வளர்ந்த மகனுக்கு எடுத்துக் கூறி அவன் மனதை மாற்றினார்கள்.

இன்னொரு வீட்டில் எங்கள் தெருவில் வசிக்கும் பெண்மணி ஒருவர் தன் மகள் பத்தாவது படிக்கின்ற இந்த நேரத்தில் இரண்டாவதாக தாய்மை அடைந்திருக்கிறார். அதை  புரிந்துகொண்ட அவரின் மகள் நல்லது எனக்கு நான்  விளையாடும் பொழுது பந்தை தூக்கிப் போடும்போது பிடித்துக் கொடுப்பதற்கு ஒரு தம்பியோ தங்கையோ எனக்கு கட்டாயம் வேண்டும். ஆதலால் நான் மனமகிழ்ச்சியுடன் இன்னொரு குழந்தை வர இருப்பதை வரவேற்கிறேன் என்று உற்சாகம் அடைந்தாள். 

இதையும் படியுங்கள்:
உயில் இல்லாமல் சொத்தைப் பிரிப்பது எப்படி?
lifestyle articles

ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.அது போல் தான் ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு விதமாக எதிர்பார்க்கிறார்கள். முதல் குழந்தையின் விருப்பங்களை தெரிந்து கொண்டு அவர்களின் மனதை மகிழ்ச்சியாக்கி, சூழ்நிலையை புரிய வைத்து இது போல் இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதை வரவேற்கும்படி செய்யுங்கள். 

Read Entire Article