ARTICLE AD BOX
சினேகன்
தமிழ் சினிமாவில் சிறந்த பாடல்களை எழுதி மக்களால் கொண்டாடப்பட்ட கொண்டாடப்படும் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன்.
பிக்பாஸ் முதல் சீசனில் இவர் கலந்துகொண்ட பிறகு தான் சினிமாவில் இப்படிபட்ட ஹிட் பாடல்களை இவர் எழுதியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. பிக்பாஸ் முடித்த கையோடு அரசியல், சீரியல் என பிஸியாக இருக்கிறார்.
பரிசு
பிக்பாஸ் முடிந்த பிறகு பாடலாசிரியர் சினேகன் தனது நீண்டநாள் காதலி கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தார்கள்.
இந்த நிலையில் சினேகன் தனது மனைவி கன்னிகாவிற்கு ஐபோன் பரிசளித்துள்ளார். அவரிடம் போன் கொடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.