இயக்குனர் ஷங்கரின் சொத்துக்கள் முடக்கம்! அதிர்ச்சி தகவல்

3 days ago
ARTICLE AD BOX

பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்போனவர் இயக்குனர் ஷங்கர். எந்திரன் படத்தின் மூலமாக அவர் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

எந்திரன் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கதை திருட்டு புகார் கூறி இருந்தார். தான் 2007ல் எழுதிய 'ஜுகிபா' என்ற கதையை காபி அடித்து 2010ல் ஷங்கர் எந்திரன் என்ற படம் எடுத்து இருப்பதாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது பற்றி அமலாக்க துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது.

சொத்துக்கள் முடக்கம்

அமலாக்கத்துறை விசாரணையில் எந்திரன் படம் 290 கோடி ரூபாய் வசூல் ஈட்டி இருக்கிறது என்றும், படத்திற்காக ஷங்கர் 11.5 கோடி சம்பளமாக பெற்றதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் எந்திரன் கதை திருட்டு என்பதும் உறுதியாகி இருப்பதாகவும், அதனால் இது திட்டமிடப்பட்ட குற்றமாக கருதப்பட்டு ஷங்கரின் சொத்துக்கள் ED மூலமாக மூடப்பட்டு இருக்கிறது.

மேலும் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது சுமார் 10.11 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று அசையா சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கின்றன என அமலாக்கத் துறை தெரிவித்து இருக்கிறது.  

Read Entire Article