இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி 2'!

3 hours ago
ARTICLE AD BOX

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் ரிஷி நடிக்கும் 'திரௌபதி 2'!

News
oi-Sonia R
| Published: Thursday, February 27, 2025, 20:29 [IST]

'திரௌபதி'யை பெரிய திரைகளில் வரவேற்கும் நேரம் இது. இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோர் இணைந்த 'ருத்ர தாண்டவம்' மற்றும் 'திரௌபதி' படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்றது. இப்போது இவர்கள் மீண்டும் 'திரௌபதி 2' படத்தில் இணைந்துள்ளனர். இம்முறை, 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் பக்கங்களில் இருந்து ஒருபோதும் மறைந்துவிடாத தீவிரமான போர்வீரர்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சிவாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டும் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவனத்தைக் கவர்ந்தது.

Mohan G Richard Rishi Draupadi 2 Ruthra Thandavam

இதுபற்றி இயக்குநர் மோகன் ஜி பேசியிருப்பதாவது, "படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வைக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மும்பை, ஹைதராபாத், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இதற்கு முன்பு எங்கும் பார்த்திராத இடங்களில் மொத்த படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. இந்த வருட முடிவுக்குள் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

'திரௌபதி 2' திரைப்படம் 14 ஆம் நூற்றாண்டின் பின்னணியில் ஹொய்சாள வம்சத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. தர்மத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அந்த வீரம் மிக்க வீரர்களின் கதையை இந்தப் படம் சொல்லும்" என்றார்.

இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ளது. ஜிப்ரான் வைபோதா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிப்ரான் மற்றும் ஜிப்ரான் வைபோதா முதன்முறையாக இணைந்துள்ள படம் 'திரௌபதி 2' என்பது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்தான அடுத்தடுத்த அறிவிப்புகள் மற்றும் படத்தில் நடிக்கவுள்ள மற்ற பெரிய நடிகர்கள் விவரமும் விரைவில் வெளியாகும்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Draupadi 2 Announcement
Read Entire Article