ARTICLE AD BOX
இயக்குநர் தனுஷ் ஜெயிச்சாரா? இல்லையா? “NEEK” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் உள்ளே!!
கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ். இவரது இயக்கத்தில் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா, மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட இளம் நடிகர்களின் நடிப்பில் உருவான நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படம் இன்று வெளியாகி உலகமெங்கும் வெற்றி நடை போட்டு வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது “NEEK” படத்தின் திரை விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்த தனுஷ், தற்போது “NEEK” படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வரும் அளவுக்கு இப்படத்தை கொடுத்துள்ளார். வித்தியாசமான நடிப்பில் மேத்யூ தாமஸ் பட்டையை கிளப்பியுள்ளார். குறிப்பாக காதலி கதாபாத்திரத்தில் நடித்த அனிகா மற்றும் ரம்யா ரங்கநாதன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
காதலன் காதலிக்கு இடையே இருக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கும் இசை அற்புதமாக போட்டுள்ளார் GV பிரகாஷ். இதற்கிடையில் GOLDEN SPARROW பாடலுக்கு வரும் பிரியங்கா மோகன் நடனத்தில் அசர வைத்துள்ளார். படம் முழுக்க செண்டிமெண்ட், ஆக்சன், காதல் என குடும்பங்கள் கொண்டாடும் விதமாக படத்தை தனுஷ் கொடுத்துள்ளார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக அமைய வாய்ப்புள்ளது எனவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் “NEEK” திரைப்படத்திற்கு 5 ற்கு 3.5 மதிப்பெண்கள் கொடுக்கலாம்.
The post இயக்குநர் தனுஷ் ஜெயிச்சாரா? இல்லையா? “NEEK” படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம் உள்ளே!! appeared first on EnewZ - Tamil.