இமான் இசையில் ஆண்ட்ரியா குரலில் வெளியான லெவன் பட பாடல்!

2 hours ago
ARTICLE AD BOX

லெவன் படத்தின் ’தமுகு’ பாடல் ஆண்ட்ரியா குரலில் வெளியாகியுள்ளது.

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் ஏஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் லெவன்.

இப்படத்துக்காக ’தமுகு’ என்ற சிறப்புப் பாடல் உருவாக்கப்பட்டு, சரிகம தமிழ் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த உன்னி முகுந்தன்!

டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். வரிகளை ராகேண்டு மெளலி எழுதியுள்ளார். இமான் மற்றும் ஆண்ட்ரியா நடினம் ஆடியுள்ள இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தின் பிரதான பாத்திரங்களில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

லெவன் திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article