இப்படியொரு கதை எந்த படத்திலும் வந்ததில்லை: ஜோதிகா பெருமிதம்..

4 days ago
ARTICLE AD BOX
jyothika interesting speech in dabba cartel trailer launch

ஜோதிகா நடித்த வெப் சீரிஸ் வரும் 28-ந்தேதி ரிலீஸாகிறது. இது பற்றிய விவரம் காண்போம்..

ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாகி வருகிறார். கடந்த ஆண்டு அஜய் தேவ்கன் ஜோடியாக ‘சைத்தான்’ படத்தில் நடித்தார். ஸ்ரீகாந்த் என்கிற பாலிவுட் படத்திலும் நடித்திருந்தார். இப்போது ‘டப்பா கார்டெல்’ மற்றும் ‘லயன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ‘டப்பா கார்டெல்’ பட விழாவில் ஜோதிகா தெரிவித்ததாவது: ‘காதல் தொடர்பான படங்கள், ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடுவது போன்ற படங்களில் நடிப்பதையெல்லாம் நான் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன். எனக்கு அதில் நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. ஹீரோக்களுடன் சுற்றியது எல்லாம் போதும். எனக்கு இப்போது 47 வயதாகிறது.

பெண்களை மையப்படுத்திய கதைகள், ஹீரோயினுக்கு அழுத்தம் தரக்கூடிய கதைகளில் கவனம் செலுத்தி நடித்து வருகிறேன். அது போன்ற ஒரு வெப் சீரிஸ் தான் டப்பா கார்ட்டெல். இதுவரையில் இப்படியான கதை எந்த ஒரு படத்திலும் வந்தது இல்லை. அதனால், இந்த வெப் சீரிஸில் நடித்திருக்கிறேன்.

பொதுவாக வீட்டிலேயே இருக்கும் பெண்கள் எப்படி வெளியுலகை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த சீரிஸ் பேசும். இதில், என்னுடைய ரோல் ரொம்ப அழுத்தமாகவும், ஆழமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த சீரிஸின் மூலமாக பல பெண்களுக்கும் அவர்களுக்கு வாழ்க்கையில் நடந்தது போன்று ஓர் உணர்வு வரும்’ என்றார். இந்த சீரிஸ் வரும் 28-ம் தேதி வெப் சீரீஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஹிதேஷ் பாட்டிய இயக்கத்தில் ஷபானா ஆஸ்மி, கஜ்ராஜ் ராவ், நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆனந்த், சாய் தம்ஹங்கர், ஜிஷு சென்குப்தா, லில்லேட் துபே, பூபேந்திர சிங் ஜாதாவத் ஆகியோர் நடித்துள்ளனர். பெண்களை ஈர்க்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

jyothika interesting speech in dabba cartel trailer launchjyothika interesting speech in dabba cartel trailer launch

 

The post இப்படியொரு கதை எந்த படத்திலும் வந்ததில்லை: ஜோதிகா பெருமிதம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article