இப்படியே போனா வேலைக்காகாது!. குஷ்பூ எடுத்த அதிரடி முடிவு

6 hours ago
ARTICLE AD BOX

Kushboo : ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவருக்கு கோயில் கட்டியது மட்டுமல்லாமல் குஷ்பூ இட்லி என பல பொருளுக்கு இவரது பெயர்தான் பிராண்டாக இருந்தது. ஆனால் நடிகைகள் சினிமாவில் சில காலம் தான் கொடி கட்டி பறக்க முடியும்.

அவ்வாறுதான் குஷ்பூ சில காலம் மட்டுமே முன்னணி நடிகையாக வளம் வந்த நிலையில் அதன் பிறகு அரசியலில் இறங்கினார். இப்போது பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். மேலும் சினிமாவில் சில முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதுவும் அண்ணாத்த படத்தில் குஷ்பூ உப்பு சப்பு இல்லாத கதாபாத்திரத்தில் நடித்ததால் தனது கவலையை தெரிவித்தார். மேலும் இப்போது படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கும் குஷ்பூ இப்படியே விட்டால் வேலைக்காகாது என அதிரடி முடிவு எடுத்திருக்கிறார்.

மீண்டும் சின்னத்திரைக்கு வரும் குஷ்பூ

அதாவது சினிமாவில் இருந்து ஓய்வு பெற்ற நடிகைகள் இப்போது சீரியலில் நடித்து பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரில் நடித்த கனிகா நல்ல பெயர் பெற்றிருக்கிறார். மேலும் நிரோஷா பாண்டியன் ஸ்டோர் 2 தொடரில் கலக்கி வருகிறார்.

தேவயானி, ராதிகா போன்ற நடிகைகளும் சீரியலில் பெரிய சாதனை படைத்திருக்கின்றனர். அதோடு குஷ்பூக்கும் சீரியல் ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி, லட்சுமி ஸ்டோர் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார்.

அதோடு நம்ம வீட்டு மகாலட்சுமி என்ற சின்னத்திரை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். இப்போது டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சரோஜினி என்ற தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த தொடரில் நடிகை பானுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தொடருக்கான ப்ரோமோ வீடியோ எடுக்கப்பட்ட நிலையில் விரைவில் டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Read Entire Article