ARTICLE AD BOX

Actress Anjali: இயக்குனர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். அந்த படம் ஓடவில்லை என்றாலும் அஞ்சலிக்கு பெயர் கிடைத்தது. எனவே, அடுத்தடுத்த படங்களில் புக் ஆனார்.

அதில் வசந்தபாலன் இயக்கத்தில் அவர் நடித்த அங்காடித்தெரு படம் அவருக்கு பாராட்டை பெற்று தந்தது. அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்தார். நல்ல நடிகையாக இருந்தாலும் நடிப்பு திறமையை காட்டுவது போல அவருக்கு சில படங்கள் மட்டுமே கிடைத்தது. ராம் இயக்கிய தரமணி, பேரன்பு போன்ற படங்களிலும் அஞ்சலி நடித்தார்.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஒருபக்கம் தெலுங்கு மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார். தமிழை விட இவர் தெலுங்கு படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார். ஆனால், கதாநாயகியாக அல்ல. எல்லாமே இரண்டாவது கதாநாயகி வேடம்தான். ஆனாலும், கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் வசப்பட்டு சில காலங்கள் காதலில் இருந்தார். ஒருகட்டத்தில் அது பிரேக்கப் ஆகிவிட்டது. இப்போது தமிழை விட அதிக தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வெளியான கேம் சேஞ்சர் படத்திலும் அஞ்சலி நடித்திருந்தார்.

ஒருபக்கம், கட்டழகை தூக்கலான கவர்ச்சி உடையில் காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில், அஞ்சலியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்திருக்கிறது.
