இன்ஸ்டன்ட் காபியை விட பில்டர் காபி சுவை மிகுந்ததாக இருப்பதன் காரணம் என்ன தெரியுமா..??

3 hours ago
ARTICLE AD BOX

 

முதலில் இன்ஸ்டன்ட் காபி எவ்வாறு தயாரிக்க படுகிறது என்று பார்ப்போம்.

இன்ஸ்டன்ட் காபி

முதலில் காபி கொட்டைகள் பெரிய குடுவைகள் சேமிக்க படுகின்றன. பிறகு அவை முறையாக வறுககப்படுகிறது.

பிறகு இவை பொடி செய்யப்படுகிறது.

பொடி செய்யப்பட்ட இந்த காபி தூள் நீராவியில் brew செய்ய படுகிறது.இப்படி செய்வதால் அது திடத்தன்மயும் சுவையும் கிடைக்கிறது. முறையான காபி மணம் கிடைக்கிறது.

பிறகு இவை -50 டிகிரி குளிரில் உறையவக்க படுகிறது.

உறைந்த காபி பொடி் அரைக்க படுகிறது சிறிய துகள்களாய்.

இந்த கலவை இன்னும் சிறிது நீர் இருக்கும்.

ஆதலின் இவை 60 டிகிரி சூட்டில் சூடு படுத்தப்படுகிறது.

இப்பொழுது முழுவதுமாய் ஈரப்பதம் அகற்றி கண்ணாடி குடுவையில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்ப படுகிறது.

ஃபில்டர் காபி தயாரிக்கும் முறை.

மலையில் பறிக்கப்பட்ட காப்பி கொட்டைகள் நீரில் ஊறவைத்து பின் தோல்/ தொழும்பு நீக்க படுகிறது.

பிறகு இது காயவைக்க பட்டு சாக்கு பைகளில் அடைக்க படுகிறது.

இவை முறையாக வறுக்கப்படுகிறது.பின் பக்குவமாக பொடி செய்து விற்கப்படுகிறது.

காபி கொட்டைகள் முறையாக வறுக்கப்படுவது இதன் மணத்தை கூட்டுகிறது.

இதில் நீங்கள் வறுத்த கொட்டையாக அல்லது அரைத்த தூள் என இரண்டு முறைகளில் வாங்கலாம்.

இதில் chicory என்று அழைக்கபடும் ஒரு வகையான வேர் வறுத்து அரைக்க படுகிறது. இவை அனுமதிக்க பட்ட ஒரு கலவை. இவை காபியில் சேர்க்கும்போது காபியின் திடம் கூடுகிறது.

இப்பொழுது கேள்விக்கு வருவோம்

இன்ஸ்டன்ட் காபி பொறுத்த மட்டும் அது ஏற்கனவே காபியாக தயாரிக்கப்பட்டு ,காயவைக்கப்பட்டு ,பொடி செய்து இருப்பதால் கணிசமான அதன் மணம் சுவை இரண்டையும் இழக்கிறது.

பில்டர் காபி வறுத்து அரைத்த வுடன் காபி தயாரிப்பதால் மிகுந்த மணமுடன் சுவையுடன் இருக்கிறது

இதிலும் அறிவியல் வளர்ச்சி வந்து விட்டது. காபி டே போன்ற உணவகங்களில் வறுத்த காபி கோட்டையை உடனே பொடி செய்து நீராவியில் டிகாஷன் தயார் செயப்பட்டு காபி மிகுந்த மணமுடன் உருவெடுக்கிறது.

நீங்கள் இதை ஸ்ப்ரெஸ்ஸோ , காப்புசினோ , மாக்கியதோ என்று பலரகங்களில் சுவைக்கலாம்.

Read Entire Article