ARTICLE AD BOX
இன்றைய பஞ்சாங்கம்:-
குரோதி வருடம் மாசி மாதம் 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்: இன்று மாலை 04.29 வரை மூலம் பின்பு பூராடம்
திதி: இன்று காலை 11.27 வரை தசமி பின்பு ஏகாதசி
யோகம்: அமிர்த, சித்த யோகம்
நல்ல நேரம் காலை: 07.30 to 08.30
நல்ல நேரம் மாலை: 01.30 - 2.00
ராகு காலம் மாலை: 04.30 - 6.00
எமகண்டம் மாலை: 12.00 - 1.30
குளிகை மாலை: 03.00 - 4.30
கௌரி நல்ல நேரம் காலை: 10-30 - 11-30
கௌரி நல்ல நேரம் மாலை: 1-30 - 2-30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டம்: ரோகினி, மிருகசீரிஷம்
ராசிபலன்:-
மேஷம்
தாய் நலனின் கவனம் தேவை. வெளி வட்டாரங்களில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். இன்று வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நேர்முக தேர்வில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பெருக்கோடும். நவீன தொழில் நுட்ப கருவிகளை புதிதாக வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
ரிஷபம்
இன்று ரோகினி, மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் தாங்கள் எந்த ஒரு சுப காரியங்களையும் துவங்க வேண்டாம். கார்த்திகை நட்சத்திரகாரர்கள் தங்கள் சுபகாரியங்களை ஆரம்பிக்கலாம். புதிய முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
மிதுனம்
உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். சகோதர, சகோதரிகள் மிகவும் உதவியாக இருப்பார்கள். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்துபோன தொகை கைக்கு வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிற: வெளிர்ஊதா
கடகம்
சகோதர, சகோதரிகள் ஒற்றுமை காப்பர். நட்பு வட்டம் விரிவடையும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழுதான வாகனம் சரியாகும். உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். பொது இடத்தில் வெளிப்படையாகப் பேசி சிக்கிக் கொள்ள வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்
சிம்மம்
யோகா மற்றும் நடன வகுப்புகளில் மனம் நாடும். அதற்குண்டான முயற்சிகள் பலிக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். தங்கள் வங்கியில் டெபாசிட் உயரும். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும்.
அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்
கன்னி
கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வெளி நாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
துலாம்
கணினி துறையைச் சேர்ந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடத்தில் நல்ல பெயர் பெறுவீர்கள். தம்பதிகளின் வாழ்வில் இனிமை கூடும். கசந்த காதல் இனிக்கும். பேச்சாளர்களுக்கு பாராட்டும்,மதிப்பும் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
விருச்சிகம்
தேவையற்ற செலவுகளை குறைக்கவும். கை, கால் வலி வந்துப் போகும். எதிர்பார்த்த பணம் வரும். நினைத்த காரியம் வெற்றி பெறும். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். பெற்றோரின் உடல் நிலையை கவனிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
தனுசு
ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் அதிகம் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டிய நேரம். கலைஞர்களுக்கு வர வேண்டிய பாக்கி தொகை கைக்கு வந்து வரும். பெண்கள் செலவுகளை குறைத்துக் கொள்வர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மகரம்
எதிர்பார்த்திருந்த வேலைக்கான அழைப்பு இப்போது வரும். வேலையாட்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் கூடும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்
கும்பம்
திருமணத்திற்கு தேவையான ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். வாஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சியில் பெரிய பொறுப்புகளும் பதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் வரவேண்டிய பாக்கித் தொகை வந்து சேரும். பெண்களின் திருமண கனவு நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
மீனம்
எதிர்க்கட்சியினரின் பாராட்டு கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை உங்கள் ரசனைக்கேற்ப அமையும். வருமானம் உயரும். தங்கள் பிள்ளைகள் விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும். எனவே, கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்