இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

2 days ago
ARTICLE AD BOX

இன்றைய போட்டியில் முக்கியமான மைல்கல் சாதனையைக் கடக்க காத்திருக்கும் கோலி!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு மோசமான ஆண்டுகளாக அமைந்து வருகின்றன. அவரால் அவருடைய முந்தைய ‘ரன் மெஷின்’ வேகத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. இதனால் அவர் தன்னுடைய உச்சத்தைத் தொட்டு கீழிறங்க தொடங்கிவிட்டார் என்ற கருத்துகள் எழுந்துள்ளன. ஆனாலும் அவர் இடையிடையே சில நல்ல இன்னிங்ஸ்களையும் ஆடி வருகிறார்.

சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியிலும் கூட கோலி சுழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறி அவுட்டானார். இந்நிலையில் இன்று நடக்கவுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்றைய போட்டியில் அவர் 15 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டிகளில் 14000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இதுவரை இந்த சாதனையை சச்சின் மற்றும் சங்ககரா ஆகிய இருவர் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Read Entire Article