இன்றும் காந்தியடிகள் கேலி செய்யப்பட வேண்டுமா..? – முதல்வருக்கு ஆளுநர் ரவி கேள்வி

10 hours ago
ARTICLE AD BOX

காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டதாகவும், இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா..? என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜ் பவன் வெளியிட்டுள்ள பதிவில், “காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை, அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை, நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?

தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என குறிப்பிடப்பட்டுள்ளது.

"காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை – அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை – நகர அருங்காட்சியகத்தின் ஒரு…

— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 30, 2025

Read more : “இவ்வளவு பெரிய நிகழ்வில் இது மாதிரியான சிறிய சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்”..!! மகா கும்பமேளா குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து..!!

The post இன்றும் காந்தியடிகள் கேலி செய்யப்பட வேண்டுமா..? – முதல்வருக்கு ஆளுநர் ரவி கேள்வி appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article