ARTICLE AD BOX
Tamil Nadu weather Today : தமிழ்நாட்டில் கோடை வெப்பம் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில் மழை குறித்த குட்நியூஸை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். கோடை வெப்பம் தகிக்க தொடங்கியுள்ள சூழலில் வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் இந்த மழை அப்டேட் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. பிப்ரவரி 28ஆம் தேதியான இன்று , தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
கிழக்கு திசை ட காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 1ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இத கண்டிப்பா செய்யுங்க.. இல்லைனா ரேஷன் அட்டை கேன்சலாகிடும்..
தமிழ்நாட்டின் இன்றைய வெப்பநிலை :
பிப்ரவரி 28 ஆம் தேதியான இன்று சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.07 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28.74 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். கோவையில் குறைந்தபட்ச வெப்பநிலை 21.26 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33.2 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். மதுரையில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.97 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 33.31 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
திருச்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை 23.56 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 32.89 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும். ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவானது. இன்றும் அதேஅளவு இருக்கும் என தெரிகிறது.
மேலும் படிங்க: என்னால ஆஜராக முடியாது...? உங்களால என்ன செய்ய முடியும்...? சீமான் பகீர் பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ