இன்னும் கொஞ்சம் இருக்கனும் தல.. கோரிக்கை வைத்த சாம்சன்.. ரஜினி ஸ்டைலில் நெஞ்சை தொட்ட தோனி

3 days ago
ARTICLE AD BOX

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்றுள்ளார். 2019இல் சர்வதேச கிரிக்கெட்டின் ஓய்வு பெற்ற பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடும் அவர் 43 வயதை தொட்டு விட்டதால் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்துள்ளார்.

மேலும் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் கடந்த சில வருடங்களாகவே கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்கிறார். ஆனால் ஓரிரு பந்துகளை எதிர்கொண்டாலும் அதில் அதிரடி காட்டும் தோனி வயதானாலும் தம்முடைய ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்து வருகிறார். எனவே விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் இன்னும் சில வருடங்கள் விளையாட வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் விருப்பமாகும்.

சாம்சன் கோரிக்கை:

இந்நிலையில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் எம்எஸ் தோனி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது ஐபிஎல் தொடரில் இன்னும் கொஞ்சம் காலம் விளையாட வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை தோனியிடம் நேராக சாம்சன் வைத்தார். இது பற்றி அவர் பணிவுடன் பேசியது பின்வருமாறு.

“எம்எஸ் தோனி ஐபிஎல் தொடரில் விளையாட வரும் போதெல்லாம் மக்கள் அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பதை பற்றி பேசுகிறார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் இன்னும் கொஞ்சம் காலம் விளையாட வேண்டும் பையா என்று நான் எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். அது தான் எனது மனதில் நான் வைத்துள்ள எடுத்துக்காட்டாகும்”

தல தோனி தல தான்:

“இன்னும் கொஞ்சம் வேண்டும் என்பதே நம்முடைய இந்தியர்களின் மனநிலையாகவும் இருக்கிறது. நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன்” என்று மறைமுகமாக இன்னும் சிறிது காலம் விளையாட வேண்டுமென தோனியிடம் அவர் கேட்டுக்கொண்டார். அதை அருகே அமர்ந்திருந்த தோனி புன்னகையுடன் கேட்டு சிரித்தார். பின்னர் “என் வழி தனி வழி” என்று ரஜினிகாந்த் ஸ்டைலில் அவர் சாம்சனுக்கு பதிலளித்தது அங்கிருந்தவர்களை ஆர்ப்பரிக்க வைத்தது.

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி: 107 ரன்ஸ்.. ஐசிசி தொடர்களில் சீறி வந்த ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய தெ.ஆ

மேலும் அந்த நிகழ்ச்சியின் முடிவில் தோனியிடம் கையொப்பமிட்ட பேட்டை ஏற்பாட்டாளர்கள் கேட்டனர். அப்போது அதில் கையெழுத்திட்ட தோனி நீங்களும் கையெழுத்திடுங்கள் என்று சாம்சனிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பரவாயில்லை நீங்கள் போட்டதே போதும் என்று சாம்சன் சொன்னார். அதை ஏற்காத தோனி நீங்கள் போட்டே ஆக வேண்டும் என்று சொன்னதைத் தொடர்ந்து சாம்சன் கையெழுத்திட்டார். அந்த வகையில் தமக்கு சமமாக சாம்சனை மேடையில் நடத்திய தோனியை இதனால் தான் இவர் தல என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டுகின்றனர்.

The post இன்னும் கொஞ்சம் இருக்கனும் தல.. கோரிக்கை வைத்த சாம்சன்.. ரஜினி ஸ்டைலில் நெஞ்சை தொட்ட தோனி appeared first on Cric Tamil.

Read Entire Article