இன்னும் 2 வாரம்தான் இருக்கும்.. அடுத்த நிதிப ஆண்டு தொடக்கம்.. வருமான வரி காட்டுறீங்களா? கவனம்!

22 hours ago
ARTICLE AD BOX

இன்னும் 2 வாரம்தான் இருக்கும்.. அடுத்த நிதிப ஆண்டு தொடக்கம்.. வருமான வரி காட்டுறீங்களா? கவனம்!

Chennai
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த நிதி ஆண்டு தொடங்க உள்ளது.. ஏப்ரல் 1ம் தேதி நெருங்கி வரும் நிலையில் பலரும் புதிய வருமான வரி regime மாற தொடங்கி உள்ளனர். தற்போது உள்ள முறையில் இருந்து வேறு முறைக்கு மாற பலரும் விரும்புகின்றனர்.

கடந்த பட்ஜெட்டில் வருமான வரி ஸ்லாப் மாற்றப்பட்டு உள்ளது. புதிய வருமான வரி regime மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது. பழைய regime ல் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 12 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 12க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 15 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 15 லட்சத்திற்கு மேல் உங்கள் சம்பளம் போகும் போது

income tax

உங்களின் சம்பளத்தின் முதல்

0-4 லட்சம் ரூபாய்க்கு வரி இல்லை
4-8 இலட்சம் ரூபாய்க்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம் வரி விதிக்கப்படும்
12-16 இலட்சம் ரூபா 15 சதவீதம் வரி விதிக்கப்படும்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம் வரி விதிக்கப்படும்
20-24 இலட்சம் ரூபா 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம் வரி விதிக்கப்படும்

புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது

பழைய வருமான வரி முறை எப்படிப்பட்டது

நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.

10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு வாடகைக்கான மூலத்தில் பெறப்படும் வரிகான (டிடிஎஸ்) வருடாந்திர வரம்பை தற்போதைய ₹2.4 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்த்துவதாக உத்தரவிட்டுள்ளார்.

பட்ஜெட் ஆவணத்தின்படி, ஒருவர் வாங்கும் வாடகை மாதத்திற்கு ₹50,000க்கு மேல் இருந்தால் மட்டுமே இனி அதற்கு டிடிஎஸ் செலுத்த வேண்டும். அதாவது வருடத்திற்கு 6 லட்சம் வரை வாடகை வருமானம் இருந்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டியது இல்லை.

முதலீடுகள், வீட்டு லோன் இருந்தால் எந்த முறை பெஸ்ட்;

உங்களுக்கு முதலீடுகள் அதிகம் உள்ள பட்சத்தில்.. வருமானமும் மாதத்திற்கு 1 லட்சத்திற்கு மேல் இருந்தால் புதிய வருமான வரிக்கு பதிலாக பழைய முறையை பின்பற்றலாம். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

உங்களுக்கு பெரிய அளவில் முதலீடுகள் இல்லை. அதேபோல் வருமானமும் வருடம் 12 லட்சம் என்றால் புதிய முறையே பெஸ்ட்.

இந்த சலுகை முதலில் எல்லோருக்கும் கிடையாது. புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கே அறிவிக்கப்பட்டு உள்ளது.

0-4 லட்சம் ரூபாய் வரி இல்லை
4-8 இலட்சம் ரூபா 5 சதம்
8-12 லட்சம் ரூபாய் 10 சதவீதம்
12-16 இலட்சம் ரூபா 15 சதம்
16-20 லட்சம் ரூபாய் 20 சதவீதம்
20-24 இலட்சம் ரூபா 25 சதம்
24 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீதம்

More From
Prev
Next
English summary
Next Finance year is nearing, What regime you should choose in Old and New income Tax regime
Read Entire Article