ARTICLE AD BOX
இனி விஜய் டிவியில் NO பிக்பாஸ்.. தட்டி தூக்கிய கலர்ஸ் தமிழ்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சின்னத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று தான் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 8 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதைத் தொடர்ந்து இனி வரப்போகும் பிக் பாஸ் சீசன் 9 விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்று தகவல் கிடைத்துள்ளது. அது பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
சாம்பியன்ஸ் டிராபி: முதல் வெற்றியை நோக்கி இந்தியா.. இன்று வங்கதேசத்துடன் பலப்பரீட்சை!!
அதாவது, சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 23ம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ரீ-டெலிகாஸ்ட் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன் இணைந்து JioHotstar ஆக மாறியது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இனி வரப்போகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post இனி விஜய் டிவியில் NO பிக்பாஸ்.. தட்டி தூக்கிய கலர்ஸ் தமிழ்.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! appeared first on EnewZ - Tamil.