இனி ரீசார்ஜ் செய்யலைனா நம்பர் போயிடாது! - TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1 day ago
ARTICLE AD BOX

இனி ரீசார்ஜ் செய்யலைனா நம்பர் போயிடாது! - TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TRAI

ரீசார்ஜ் செய்யாத செல்போன் எண்கள் செயல் இழப்பை குறைக்கும் வகையில் ட்ராய் (TRAI தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 

நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. மேலும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றில் செல்போன் எண் தர வேண்டியுள்ளதால் ஒரு குறிப்பிட்ட செல் நம்பரை தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது அவசியமாக உள்ளது.

 

ஆனால் அதேசமயம் தற்போது 2ஜி, 3ஜி ப்ளான்கள் எல்லாம் இல்லாமல் போய் விட்டதால் 4ஜி ப்ளான்களில் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. எளிய மக்கள் பலர் மாதம்தோறும் ரீசார்ஜ் செய்வது என்பது குறைவாகவே உள்ளது. இதுபோல பல நாட்களாக ரீசார்ஜ் செய்யாமல் பயன்படுத்தாமல் உள்ள செல்போன் எண்களை காலாவதியானதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துவிடுகின்றன.
 

 

ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவன சிம் கார்டுகளை ரீசார்ஜ் செய்யாமல் தக்க வைக்க 90 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்கு பின்னரும் ரீசார்ஜ் செய்யாவிட்டால் அந்த சிம் எண்ணை காலாவதியானதாக அந்நிறுவனங்கள் செய்துவிட அதிகாரம் உள்ளது. இந்நிலையில்தான் இந்த காலாவதி காலத்தில் அவகாசம் வழங்க ட்ராய் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி சிம் கார்டில் ரூ.20 பேலன்ஸ் வைத்திருந்தால் அதை பிடித்துக் கொண்டு மேலும் 30 நாட்கள் காலவதியாகும் தேதியை நீட்டிக்கலாம் என ட்ராய் அறிவித்துள்ளது. BSNL ல் சிம் எண் காலாவதியாகும் கால அவகாசம் 180 நாட்களாக உள்ளது. மற்ற நிறுவனங்களில் குறைவான அவகாசமே உள்ளதால் பயனர்கள் தங்கள் சிம் எண்களை காப்பாற்றிக் கொள்ள இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

Read Entire Article