ARTICLE AD BOX

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதம் 12 சதவீதம் தொகையானது பிடித்தம் செய்யப்படுகிறது. இது ஊழியர்களுடைய வருங்கால வைப்பு நிதி ஆணையத்தால் மாதம் தோறும் பிடித்தம் செய்யப்பட்டு நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025 ஆம் வருடம் தொடக்கத்தில் இருந்து இபிஎப்ஓ அமைப்பானது பல்வேறு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் PF வித்டிராவல் தொடர்பான கிளைகளுக்கு 60% ஆட்டோமேட்டிக் சிஸ்டம் மூலமாக தீர்வு செய்யப்பட்டு வருகிறது. பணம் செலுத்துவதற்கான வரம்பு ஒரு லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் உடல் நலக்குறைவு மருத்துவ செலவு, வீடு கட்டுதல், கல்வி செலவு மற்றும் திருமண செலவுகளுக்கான கிளைம்களும் விரைவில் ஆட்டோ மோடின் கீழ் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது, இதனால் மூன்றே நாளில் கிளைம் செட்டில்மெண்ட் முடிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.