இனி நடப்பதே கஷ்டம்... பூமிக்கு வந்த பின் சுனிதா வில்லியம்ஸிற்கு வரும் பிரச்னைகள்?

18 hours ago
ARTICLE AD BOX

Sunita Williams: இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் சுமார் 9 மாதங்களுக்கு மேல் விண்வெளியில் சிக்கியிருக்கும் நிலையில், அடுத்த வராம் அவர் பூமிக்கு திரும்ப இருக்கிறார்.

Sunita Williams: பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

வெறும் 8 நாள்கள் மட்டும் பயணம் செய்ய திட்டமிட்டு சுனிதாவும், புட்சும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்கள் சென்ற Starliner விண்கலத்தில் ஹீலியம் கசிவு உள்ளிட்ட சில தொழில்நுட்ப பிரச்னை காரணமாக அவர்கள் 9 மாதக்காலம் விண்வெளியிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். 

அவர்களை பூமிக்கு அழைத்துவர நாசாவின் Crew-10 விண்கலம் நேற்று முன்தினம் (மார்ச் 14) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அந்த Crew-10 விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துவிடட்து. அடுத்த வாரம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பூமிக்கு வருவார்கள் எனலாம்.

#WATCH | Stranded for 9 months at International Space Station (ISS), astronauts Butch Wilmore and Sunita Williams to return to earth

A SpaceX rocket carrying a new crew has docked at the International Space Station (ISS) as part of a plan to bring astronauts home. The astronauts… pic.twitter.com/rb38BeCEQ6

— ANI (@ANI) March 16, 2025

மேலும் படிக்க | மீண்டும் தாமதம் .. சுனிதா வில்லியம்ஸ் இனி எப்படி பூமி திரும்புவார்?

Sunita Williams: தசைகள் பலவீனமடையும்

9 மாதங்களாக விண்வெளியில் இருந்துவிட்டு தற்போது பூமிக்கு திரும்புவதால், உடல் ரீதியாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் சந்திக்க இருக்கும் பிரச்னைகள் குறித்து இங்கு காணலாம்.

ஈர்ப்பு விசையில்லாத விண்வெளியில் அதிகமாக இருந்துள்ளனர். இந்த ஈர்பு விசை பற்றாக்குறையால் சுனிதாவுக்கும், புட்சுக்கும் எலும்பு அடர்த்தி இழப்பு ஏற்படும். விண்வெளியில் ஒவ்வொரு மாதமும், விண்வெளி வீரர்கள் இந்த இழப்பை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கைகள் எடுக்காவிட்டால், அவர்களின் எடை தாங்கும் எலும்புகள் தோராயமாக ஒரு சதவீதம் அடர்த்தி குறையும் என நாசா கூறுகிறது. பொதுவாக பூமியில் அதிகம் வேலை செய்வதன் மூலம் தசைகளும் அதிகம் செயல்படும். விண்வெளியில் கடினமாக உழைக்கத் தேவையில்லை என்பதால் தசைகள் பலவீனமடைகின்றன.

Sunita Williams: இனி நடப்பதே கஷ்டமாக இருக்கும்

இவர்கள் நீண்ட நாள்களாக விண்வெளியில் இருந்ததால் "Baby Feet" (குழந்தை பாதங்கள்) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அதாவது, அவர்களுக்கு இயல்பாக நடப்பதே கடுமையான வலியை ஏற்படுத்தலாம்.

பொதுவாக நாம் பூமியில் நடக்கும்போது, ​​நமது பாதங்கள் ஈர்ப்பு விசை மற்றும் உராய்வு போன்ற பல எதிர்ப்புகளை எதிர்கொள்கின்றன. இவைதான், உள்ளங்காலில் உள்ள தோலை தடிமனாக்குகிறது. தோல் தடிமனாவதன் மூலம் தேய்மானத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். அதே வேளையில், அசௌகரியம் மற்றும் வலியில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

மேலும் படிக்க | விண்வெளியில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்... நாசா ஓராண்டுக்கு கொடுக்கும் சம்பளம் எவ்வளவு?

அந்த வகையில், விண்வெளியில் பல மாதங்கள் இருந்துவிட்டு வருவதால், அவர்களின் உள்ளங்காலில் கடினமான தோல் உரிந்துபோய், அவர்களின் மாதங்கள் மிகவும் மென்மையாக மாறியிருக்கும். 

உள்ளங்காலில் மீண்டும் தோல் தடிமனாவது வரை அவர்களுக்கு கடுமையான வலி ஏற்படலாம். அவர்களின் தோல் தடிமனாக சில வாரங்கள் அல்லது இரண்டு மாதங்கள் வரை கூட எடுக்கலாம். அவர்களுக்கு நடைபயிற்சி சங்கடமாகவும் வேதனையாகவும் இருக்கும்.

Sunita Williams: கதிர்வீச்சின் தாக்கம்

விண்வெளியில் கதிர்வீச்சின் தாக்கல் அதிகம். நீண்ட நாள்கள் விண்வெளியில் இருந்ததால் அதன் தாக்கமும் அதிகமாகிறது. பூமியில் வளிமண்டலமும் காந்தப்புலமும் மனிதர்களை அதிக அளவிலான கதிர்வீச்சில் இருந்து மனிதர்களை பாதுகாக்கின்றன.

இது விண்வெளி வீரர்களுக்கு இருக்காது. பூமியின் காந்தப்புலம், சூரியனில் இருந்து வரும் சூரிய காந்தத் துகள்கள் மற்றும் விண்மீன் அண்டக் கதிர்கள் ஆகியவை விண்வெளி வீரர்களுக்கு தாக்கத்தை உண்டாக்குகிறது.

Sunita Williams: இரத்த ஓட்டம் குறையும், கண் பார்வை பாதிக்கலாம்!!

ஈர்ப்பு விசைக்கு எதிராக இரத்தத்தை இதயம் அதிகம் பம்ப் செய்ய வேண்டியதில்லை. இதயம் மிகக் குறைவான வேலையை செய்ய வேண்டியிருப்பதால், விண்வெளி வீரரின் உடலில் இரத்த அளவும் குறைகிறது. 

உடலில் இரத்தம் பாயும் விதமும் மாற்றமடைகிறது. சில பகுதிகளில் இரத்த ஓட்டமும் மெதுவாகும். இது உடலில் கட்டிகளை ஏற்படுத்தும்.  
திரவக் குவிப்பு கண் இமைகளின் வடிவத்தையும் மாற்ற வழிவகுக்கும். இது பார்வையை பலவீனப்படுத்துகிறது. பெரும்பாலான விண்வெளி வீரர்கள் விண்வெளியில் கண்ணாடி அணிந்திருப்பதைக் காண இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பணத்திற்காக கற்பை விற்ற இளம் பெண்.. ரூ.18 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகர்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article