இனி கையேந்த வேண்டாம்.. காப்பர் ஃபாயில் உற்த்தியில் களமிறங்கும் ஆதித்யா பிர்லா குழுமம்

1 day ago
ARTICLE AD BOX
  Market update

இனி கையேந்த வேண்டாம்.. காப்பர் ஃபாயில் உற்த்தியில் களமிறங்கும் ஆதித்யா பிர்லா குழுமம்

Market Update

நாட்டின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்று ஆதித்யா பிர்லா குழுமம். 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வணிக உலகில் பல்வேறு வர்த்தகங்களில் ஆதித்யா பிர்லா குழுமம் ஈடுபட்டு வருகிறது. ஆதித்யா பிர்லா குழுமம் உலோகம், சிமெண்ட், பேஷன் அண்ட் ரீடெய்ல், நிதி சேவைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஜவுளி,ரியல் எஸ்டேட், சுரங்கம் என பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தனது வணிக சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், புதிதாக மின்சார வாகன பொருட்களுக்கான துறையில் ஆதித்யா பிர்லா குழுமம் களம் இறங்குகிறது. நாட்டின் முதல் காப்பர் ஃபாயில் ஆலையை ஆதித்யா குழுமம் தொடங்க உள்ளது.

இனி கையேந்த வேண்டாம்.. காப்பர் ஃபாயில் உற்த்தியில் களமிறங்கும் ஆதித்யா பிர்லா குழுமம்

நம் நாடு மின்சார வாகனங்களுக்கான காப்பர் ஃபாயில் தேவையை இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்து செய்கிறது. இந்நிலையில் நம் நாட்டில் முதலாவதாக ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தனது எதிர்வரும் ஆலையில் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் செப்பு தகடை உற்பத்தி செய்ய உள்ளது.

ஹிண்டால்கோ நாட்டின் மிகப்பெரிய அலுமினிய உற்பத்தியாளர். இந்நிறுவனம் தனது அமெரிக்க துணை நிறுவனமான நொவெலிஸூடன் சேர்ந்து, சர்வதேச அளவில் உலகின் சிறந்த அலுமினிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறுகையில், எங்கள் குழுமத்தின் முதன்மை நிறுவமான ஹிண்டால்கோ, செம்பு மற்றும் அலுமினிய பிரிவுகளில் ரூ.45,000 கோடி முதலீடு செய்யும். மின்சார வாகனங்களுக்கான நாட்டின் முதல் செம்பு தகடு (காப்பர் ஃபாயில்-copper foil) ஆலையை அமைப்பதன் மூலம் மின்சார வாகன பொருட்கள் துறையில் நுழையும். அலுமினியம், தாமிரம் மற்றும் சிறப்பு அலுமினா வணிகங்களில் அப்ஸ்ட்ரீம் மற்றும் அடுத்த தலைமுறை உயர் துல்லிய பொறியியல் தயாரிப்புகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் ரூ.45.000 கோடியை உறுதியளிக்கிறோம் (முதலீடு செய்கிறோம்).

புனே அருகே சக்கானில் உள்ள ஆதித்யா ஃபேப்ரிகேஷன் ஆலையில் உள்ள எங்கள் பேட்டரி ஃபாயில் ஆலை, குறிப்பாக மின்சார வாகன துறைக்கு பாரம்பரிய வாகன கூறுகளுக்கு உயர் செயல்திறன் கொண்ட நிலையான மாற்றுகளை வழங்க உள்ளது. இந்த ஆலையில், மின்சார வாகனங்களுக்கான நாட்டின் முதல் செப்புத் தகடு உற்பத்தி ஆலையை நாங்கள் அமைத்து வருகிறோம்.

எலக்ட்ரிக் மொபிலிட்டி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், எனர்ஜி ஸ்டோரேஜ், செமிகண்டக்டர் மற்றும் உயர் ரக எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் எதிர்காலத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வாடிக்கையாளர்களுடன் ஒத்துழைத்து, தீர்வுகளை வழங்குபவராகவும், இணை உருவாக்குனராகவும் நாங்கள் எங்களை நிலைநிறுத்திக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article