ARTICLE AD BOX
சீன விஞ்ஞானிகளின் ஒரு புதிய கண்டுபிடிப்பு குழந்தை பெற பெண்களே தேவையில்லை என்னும் நிலையை உருவாக்கிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2 ஆண் எலிகளின் விந்தணுக்களால் எலிக்குட்டி
இரு ஆண்களின் உயிர் அணுக்களை மட்டும் வைத்து குழந்தையை உருவாக்க முடியும் என்று தற்போது சீன விஞ்ஞானிகள் நிரூபணம் செய்துள்ளனர். பெண் எலி இல்லாமல் இரு ஆண் எலிகளின் உயிர் அணுக்களை வைத்து புதியதாக ஒரு எலி குட்டியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.
ஜீன் இம்ப்ரீமேன்ட்
உயிர் அணுக்களில் இருக்கக்கூடிய இம்ப்ரிமென்ட் ஜீன்களில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் பெண் எலி இல்லாமலேயே புதிய எலி குட்டி பிறப்பது சாத்தியம் என்று அவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
குழந்தை பெற பெண்கள் தேவையில்லை
இவர்களின் இந்த கண்டுபிடிப்பு பின்வரும் காலங்களில் பெண்கள் துணை இல்லாமல் ஆண்கள் மட்டுமே சேர்ந்து குழந்தைகளை உருவாக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.