ARTICLE AD BOX
மருத்துவ மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வு (NEET UG) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நீட் தேர்வுக்கான தேர்வு முறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள கலந்த ஆலோசித்து வந்துள்ளது. இந்த ஆலோசனையின் படி இந்திய தேசிய தேர்வு முகமை இன்று நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இளநிலை நீட் தேர்வுக்கான முறை பேப்பர், பேனா முறையில் நடைபெறும். அதாவது ஓஎம்ஆர் ஷீட் அடிப்படையில் நடத்தப்படும் என்பதை உறுதி செய்துள்ளது.
இதில் மிக முக்கியமாக இளநிலை நீட் தேர்வு ஒரே நாளில் ஒரே ஷிப்ட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த சந்தேகங்களை கேட்டறிந்து கொள்வதற்கு தேர்வு முகமை 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையும் அல்லது neetug2025@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தகவல்களை தெரிந்து கொள்ள வழிவகை செய்துள்ளது. இவ்வாறு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.